துருவ் விக்ரம் நடிப்பில் "மிஸ்ஸிங் மி" வீடியோ பாடல் வெளியானது!

சென்னை : தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி பட்டையை கிளப்பிய அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக் ஆதித்ய வர்மாவில் ஹீரோவாக நடித்து அறிமுகமானார் நடிகர் துருவ் விக்ரம்

இப்பொழுது விக்ரமுடன் இணைந்து மகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ள நிலையில் துருவ் விக்ரமின் மிஸ்ஸிங் மி வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது

 தடைகளை தாண்டி வெளியானது

தடைகளை தாண்டி வெளியானது

தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் வெளியாகி மாஸான வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக்கில் நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் ததுருவ் விக்ரம். விக்ரமின் மகனான இவருக்கு முதல் படம் பல்வேறு தடைகளை தாண்டி வெளியானது. ஆரம்பத்தில் வர்மா என்ற பெயரில் பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்து வந்தார். இப்படம் தயாரிப்பு குழுவுக்கு பிடிக்கவில்லை என மீண்டும் முதலிலிருந்து படத்தை எடுத்து தெலுங்கில் எப்படி வெளியானது அதே காட்சிகள் அப்படியே மாறாமல் அச்சு அசலாக தமிழிலும் ஆதித்ய வர்மா என்ற பெயரில் உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது

 அப்பா விக்ரமுடன் பக்காவான கேங்ஸ்டர்

அப்பா விக்ரமுடன் பக்காவான கேங்ஸ்டர்

முதல் படத்திலேயே சிறந்த நடிகர் என்ற பெயரெடுத்த துருவ் விக்ரம் அடுத்ததாக அப்பா விக்ரமுடன் இணைந்து பக்காவான கேங்ஸ்டர் கதையில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் கேங்ஸ்டர் படங்களை இயக்குவதில் மிகச் சிறந்த நடிகர் இயக்குனரான கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. ஜகமே தந்திரம் படத்தை தொடர்ந்து கார்த்தி சுப்புராஜ் மற்றும் தயாரிப்பாளர் லலித் குமார் இந்த படத்திலும் இணைந்துள்ளனர்

 நேரடியாக ஓடிடியில் வெளியிடுகிறது

நேரடியாக ஓடிடியில் வெளியிடுகிறது

தந்தை மகன் பாசம் ஒரு புறம் கேங்ஸ்டர் மற்றொரு புறம் என வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக்கியுள்ள மகான் திரையரங்குகளில் வெளியாகும் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஏனென்றால் விக்ரமின் படம் வெளியாகி கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு மேலானது. எனவே மகான் படத்தை திரையில் காண ரசிகர்கள் பெரும் ஆவலில் இருந்தனர் ஆனால் படக்குழு இப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிடுகிறது.

 மிஸ்ஸிங் மி வீடியோ பாடல்

மிஸ்ஸிங் மி வீடியோ பாடல்

அதன்படி பிப்ரவரி 10ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் மகான் வெளியாகிறது. இந்த நிலையில் துருவ்க்கு என்றே படத்தில ஸ்பெஷலாக வைக்கப்பட்டுள்ள மிஸ்ஸிங் மி வீடியோ பாடல் தற்போது வெளியாகி உள்ளது. செம ஸ்டைலிஷாக துருவ் நடித்துள்ளார். இப்பாடல் இப்பொழுது ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்று வருகிறது. சந்தோஷ் நாராயணனின் தனித்துவமான இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடலை துருவ் விக்ரம் எழுதி பாடியும் உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X