இன்னும் 4 நாட்கள் தான்.. பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த வர்மாவின் புது டீசர் ரிலீஸ்!

சென்னை: பிரபல தமிழ் இயக்குநர் பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் முதலில் உருவான அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கான வர்மா வரும் அக்டோபர் 6ம் தேதி ஒடிடியில் வெளியாகிறது.

இந்நிலையில், வர்மா படத்தின் புது டீசர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இன்னும் 4 நாட்களில் வர்மா படம் ஒடிடியில் வெளியாகிறது என்ற அறிவிப்பை சிம்ப்ளி சவுத் தளம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஒரு வழியாக ரிலீஸ்

ஒரு வழியாக ரிலீஸ்

இயக்குநர் பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம், மேகா செளத்ரி, ரைசா வில்சன், ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான வர்மா படம் ஒரு வழியாக வரும் அக்டோபர் 6ம் தேதி Simply South எனும் ஒடிடி தளத்தில் வெளியாகிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி மெகா பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக் தான் வர்மா. இயக்குநர் பாலா இயக்க துருவ் விக்ரம் நடித்த இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றும், இயக்குநர் பாலா படத்தை சொதப்பி விட்டார் என்றும் தயாரிப்பு தரப்பு அவர் மீது பழி போட்டுவிட்டு ஆதித்ய வர்மா படத்தை எடுத்து ரிலீஸ் செய்தனர்.

பாலா வெர்ஷனை காண

பாலா வெர்ஷனை காண

இயக்குநர் பாலா வெர்ஷனில் உருவான அர்ஜுன் ரெட்டி ரீமேக்கை காண அவரது ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர். Simply South வெப்சைட்டில் வரும் அக்டோபர் 6ம் தேதி அந்த படம் ஒடிடி ரிலீசாக வரவுள்ள நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

ரைசா வில்சன் வெயிட்டிங்

ரைசா வில்சன் வெயிட்டிங்

இயக்குநர் கிரிசாயா இயக்கிய ஆதித்ய வர்மா படத்தில் வர்மா படத்தில் நாயகிகளான மேகா செளத்ரி மற்றும் ரைசா வில்சனை அகற்றி விட்டு அவர்களுக்கு பதிலாக பனிடா சந்து மற்றும் பிரியா ஆனந்தை நடிக்க வைத்து இருந்தனர். ஒடிடியில் வர்மா படமும் ரிலீசாக உள்ள தகவலை அறிந்த ரைசா வில்சன் அந்த படத்தின் ரிலீசுக்காக வெயிட்டிங் என ஹேப்பியாக ட்வீட் போட்டுள்ளார்.

புது டீசர்

இந்நிலையில், புதிய புரமோ டீசர் ஒன்றையும் Simply South படத்தின் ஒடிடி ரிலீஸ் அறிவிப்புடன் கூடவே வெளியிட்டு துருவ் விக்ரம் மற்றும் பாலா ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. ஆதித்ய வர்மா படத்தை விட இந்த படம் ஹாட்டா இருக்குமா? எப்படி இருக்கப் போகிறது என்கிற ஆவல் இளைஞர்கள் மத்தியில் எழுந்துள்ளது. துருவ் விக்ரம் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X