தம், தண்ணி, லிப் டூ லிப்: விக்ரம் மகனின் 'வர்மா'வுக்கு பெரிய அளவில் இலவச விளம்பரம் கன்ஃபர்ம்
சென்னை: புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பதை வர்மா டீஸரில் நிரூபித்துவிட்டார் த்ருவ் விக்ரம்.
விக்ரமின் மகன் த்ருவ் ஹீரோவாக அறிமுகமாகும் படம் வர்மா. நம்ம விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்.
படத்தை ரீமேக் செய்துள்ளவர் விக்ரமின் கெரியரை தூக்கி நிறுத்திய பாலா.

வர்மா
அய்யோ, போயும் போயும் அர்ஜுன் ரெட்டி ரீமேக்கை பாலாவிடம் கொடுத்திருக்கிறாரே இந்த விக்ரம். என்ன தான் விஸ்வாசம் என்றாலும் ரீமேக்கை பாலாவை நம்பி கொடுக்கலாமா. இது அர்ஜுன் ரெட்டி ரீமேக்காக இருக்காது என்று ஆளாளுக்கு விக்ரமை நினைத்து பாவப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் வர்மா டீஸரை வெளியிட்டுள்ளனர்.
த்ருவ்
டீஸரில் த்ருவ் செமயாக இருக்கிறார். புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ற அளவுக்கு நடித்துள்ளார். டீஸரை பார்த்தால் அட இது பாலா படம் மாதிரியே இல்லையே. அவருக்கும் ரீமேக் நன்றாக வருகிறதே என்று சொல்ல வைத்துள்ளார். விக்ரமுக்கு பாலா மீது நம்பிக்கை இருப்பதால் தான் அவர் பொறுப்பில் மகனை விட்டுள்ளார் என்பது தற்போது தெரிகிறது.

பரபரப்பு
அர்ஜுன் ரெட்டி ஹீரோயின் முகச்சாயலிலேயே உள்ளார் மேகா சவுத்ரி. ஒரிஜினல் படத்தில் உள்ளது போன்றே புகைப்பிடிக்கும் காட்சி, லிப் டூ லிப் முத்தம் எல்லாம் உள்ளது. ஆனால் ஒரிஜினலில் விஜய்யின் முகத்தில் இருந்த மரண வலி த்ருவ் முகத்தில் மிஸ்ஸிங். இருப்பினும் படத்தில் அது இருக்கும் என்று நம்பப்படுகிறது.

புகைப்பிடித்தல்
படத்தில் யாராவது புகைப்பிடிப்பதை பார்த்தாலே சிலர் தடை விதிக்கக் கோரி கிளம்பிவிடுவார்கள். இந்த படத்திலோ புகைப்பிடிப்பதுடன் ஆபரேஷன் செய்ய கிளம்பும் முன்பு த்ருவ் மது அருந்துகிறார். அதனால் படத்திற்கு பெரிய அளவில் பிரச்சனை செய்து இலவச விளம்பரம் கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











