Dhruv Vikram Salary: நடித்த இரண்டு படமும் ஹிட் இல்ல... ஆனால் துருவ் விக்ரம் சம்பளம் இத்தனை கோடியா?

சென்னை: ஆதித்யா வர்மா திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் துருவ் விக்ரம்.

சீயான் விக்ரமின் மகனாக சினிமாவில் அறிமுகமான துருவ், இதுவரை இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ள துருவ், அடுத்து டாடா இயக்குநர் கணேஷ் பாபுவுடன் இணைகிறார்.

இந்தப் படத்திற்காக துருவ் விக்ரம் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 Dhruv Vikram Salary: Dhruv Vikram will get Rs 5 crore salary for his new film

கோடிகளில் சம்பளம் வாங்கும் துருவ் விக்ரம்

பாலா இயக்கிய சேது திரைப்படம் மூலம் மாஸ் ஹீரோவாக ப்ரொமோட் ஆனார் விக்ரம். தற்போது கோலிவுட்டின் வெரைட்டியான நடிகர்களில் ஒருவராக கலக்கி வரும் விக்ரம், தற்போது தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் அவரது மகன் துருவ் விக்ரமும் கோலிவுட்டின் இளம் ஹீரோவாக வலம் வருகிறார். இவர் ஆதித்யா வர்மா படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் வெற்றிப் பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்காக உருவான ஆதித்யா வர்மா, முதலில் பாலா இயக்கத்தில் வர்மா என்ற டைட்டில் தொடங்கியது. பாலாவின் மேக்கிங்கில் திருப்தி இல்லாததால் கிரீஷாயாவை இயக்குநராக்கினார் விக்ரம். ஆனாலும் தெலுங்கில் மாஸ் காட்டிய அர்ஜுன் ரெட்டி படத்தின் ஒரிஜினல் வெர்ஷன் அளவிற்கு ஆதித்யா வர்மா இல்லாமல் போனது.

அதன்பின்னர் அவரது அப்பா விக்ரமுடன் இணைந்து மஹான் படத்தில் நடித்திருந்தார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்தப் படம் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியானது. மஹான் படத்தில் விக்ரம் நடிப்புக்கு வரவேற்பு இருந்தாலும் துருவ் விக்ரமிற்கு பெரிதாக ரீச் இல்லை எனலாம். முதல் இரண்டு படங்களுமே துருவ் விக்ரமிற்கு ஹிட் கொடுக்காத நிலையில், அடுத்து இயக்குநர் மாரி செல்வராஜ் உடன் இணைந்தார்.

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்கள் மூலம் கவனம் ஈர்த்திருந்த மாரி செல்வராஜ், கபடி விளையாட்டை பின்னணியாக வைத்து துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கவிருந்தார். ஆனால், அதற்குள் உதயநிதியின் மாமன்னன் படத்தை இயக்க கமிட்டானார் மாரி செல்வராஜ். மாமன்னன் அடுத்த மாதம் வெளியாகவுள்ளதால், உடனடியாக துருவ் விக்ரம் படத்தை இயக்கவுள்ளாராம் மாரி செல்வராஜ். அதன் பின்னர் கணேஷ் பாபு இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் துருவ் விக்ரம்.

 Dhruv Vikram Salary: Dhruv Vikram will get Rs 5 crore salary for his new film

கவின், அபர்ணா நடிப்பில் கணேஷ் பாபு இயக்கிய டாடா திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. அதனைத் தொடர்ந்து துருவ் விக்ரமிற்காக கதைக் கூறியுள்ளார் கணேஷ் பாபு. இந்தப் படத்தை லைகா தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இப்படத்தில் நடிக்க துருவ் விக்ரம் 5 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. துருவ் விக்ரம் இதுவரை நடித்த இரண்டு படங்களுமே பிளாப் ஆகிவிட்டன.

ஆனாலும், அவருக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட உள்ளது கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் இந்தப் படத்தின் அபிஸியல் அப்டேட் விரைவில் வெளியாகும் எனவும், அதனைத் தொடர்ந்து படப்பிடிப்பும் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. தலைவர் 170 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க, சீயான் விக்ரமிற்கு 50 கோடி ரூபாய் வரை லைகா ஆஃபர் கொடுத்திருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X