ஆதித்ய வர்மாவின் ’அன் சென்சார்’ காட்சிகள்.. இன்ஸ்டாவில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய த்ருவ்!
Recommended Video
சென்னை: சீயான் விக்ரமின் மகன் த்ருவ் விக்ரம் ஆதித்ய வர்மா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்ய வர்மா படத்திற்கும் ஏ சான்றிதழ் தான் கிடைத்தது.
ஆனால், சென்சார் போர்டில் ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டாலும், சில காட்சிகளை படத்தில் இருந்து நீக்கியுள்ளனர்.
இந்நிலையில், அந்த காட்சிகளின் தொகுப்பை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு த்ருவ் விக்ரம் பரபரப்பை கிளப்பியுள்ளார்.
ஆதித்ய வர்மா
த்ருவ் விக்ரம் நடிப்பில் நவம்பர் 22ம் தேதி பல தடைகளை தாண்டி ஆதித்ய வர்மா படம் ரிலீசானது. பாலா இயக்கத்தில் வர்மா என்ற பெயரில் இந்த படம் எடுக்கப்பட்டு பின்னர், படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என இயக்குநர் கிரிசாயாவை வைத்து இந்த படத்தை உருவாக்கினர். இந்த படத்தில் த்ருவ் விக்ரம், பனிடா சந்து, ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

சுமார் தான்
தெலுங்கில் 100 கோடிக்கு மேலும் இந்தியில் 300 கோடிக்கும் மேலும் வசூலான அர்ஜுன் ரெட்டி கதை தமிழில் மிகவும் சுமாரான வசூலை மட்டுமே பெற்றது. இரண்டாவது முறை படத்தை உருவாக்கினாலும், த்ருவ் விக்ரம் எதிர்பார்த்த வெற்றி அவருக்கு முதல் படத்தில் கிடைக்கவில்லை.

ஏ சர்ட்டிஃபிகேட்
புகைப்பிடிப்பது, சரக்கடிப்பது, லிப் லாக் செய்வது, ஆபாசமாக பேசுவது என இளைஞர்கள் செய்யும் அத்தனை விஷயங்களும் அப்படியே ராவாக இருப்பதால், இந்த படத்திற்கு தணிக்கைக் குழு ஏ சர்ட்டிஃபிகேட்டை வழங்கியது.

ஆபாச வார்த்தைகள்
இந்த வீடியோ க்ளிப்பில் த்ருவ் விக்ரம் ஆதித்ய வர்மா படத்தில் பேசிய அத்தனை ஆபாச வார்த்தைகளும் அடங்கியிருக்கிறது. தெலுங்கு மற்றும் இந்தியில் இது போன்ற வசனங்கள் இடம் பெற்றிருந்த நிலையில், தமிழில் இந்த வசனங்கள் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓவர் லிப் லாக்
ஆதித்ய வர்மா படத்தில் நாயகி பனிடா சந்துவுக்கு த்ருவ் விக்ரம் கொடுக்கும் பல லிப் லாக் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. தற்போது த்ருவ் விக்ரம் வெளியிட்டுள்ள வீடியோ க்ளிப்பில் அதை விட ஓவராக லிப் லாக் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.


Click it and Unblock the Notifications











