சியான் விக்ரமையே தூக்கி சாப்பிட்டுருவாரு போல.. வைரலாகும் த்ருவ் விக்ரமின் தாறுமாறான புகைப்படம்!
சென்னை: சியான் விக்ரமுக்கு போட்டியாக அவரது மகன் த்ருவ் விக்ரமும் தாறுமாறாக வொர்கவுட் செய்து உடம்பை வேற லெவலில் மாற்றி உள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள 'சியான் 60' படத்திற்காக அப்பாவும் மகனும் இப்படி வெறித்தனமாக சிக்ஸ்பேக் வைத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆதித்ய வர்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான த்ருவ் விக்ரம், அடுத்ததாக தந்தையுடன் இணைந்து நடிக்கிறார்.

அபார நடிப்பு
உயிரை கொடுத்து நடிக்கும் நடிகர் என்ற பெயரை சியான் விக்ரம் எப்பவோ வாங்கி விட்டார். ஆனால், அறிமுக படத்தில் விக்ரம் கூட போடாத அளவுக்கு மிகப்பெரிய உழைப்பு அவரது மகன் த்ருவ் விக்ரம் போட்டிருந்தார். தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டியின் ரீமேக் படமான ஆதித்ய வர்மா படத்தில், அவர் காட்டும் டிரான்ஸ்ஃபர்மேஷன் தமிழ் சினிமா ரசிகர்களை வியக்க வைத்தது.

அப்பாவுடன் இணைந்து
முதல் படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றியை கொடுக்க வில்லை என்றாலும், நல்ல நடிகர் என்ற அங்கீகாரத்தை த்ருவ் விக்ரமுக்கு தாராளமாகவே கொடுத்தது. இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் தனது அப்பா சியான் விக்ரமுடன் இணைந்து நடிக்கிறார் த்ருவ் விக்ரம். கேங்ஸ்டர் படமாக உருவாகவுள்ள இந்த படம் ‘சியான் 60' தற்காலிகமாக அழைக்கப்படுகிறது.

அந்த பெயரை தூக்கிட்டாங்க
ரஜினியின் பேட்ட, தனுஷின் ஜகமே தந்திரம் படங்களை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள அடுத்த படத்தின் டைட்டில் 'திறவுகோல் மந்திரவாதி' என அவரது விக்கிபீடியா பக்கத்தில் பதிவு செய்யப்பட்டு இருந்தது. அதுதான் சியான் 60 படத்தின் டைட்டிலா? என சந்தேகங்கள் எழுந்த நிலையில், தற்போது அந்த படத்தின் டைட்டில் நீக்கப்பட்டு சியான் 60 என மாற்றப்பட்டு இருக்கிறது.

முரட்டுத்தனமாக
நடிகர் சியான் விக்ரமின் முரட்டுத் தனமான சிக்ஸ்பேக் லுக் வெளியாகி வைரலாகி வருகிறது. பொன்னியின் செல்வன் படத்துக்காக இந்த லுக்கா? துருவ நட்சத்திரத்திற்காகவா? என சந்தேகங்கள் எழுந்த நிலையில், சியான் 60 படத்துக்காகத் தான் இப்படியொரு கில்லர் லுக்கில் விக்ரம் மாறியுள்ளார் என்கிற தகவல் கசிந்துள்ளது.

அப்பாவுக்கு போட்டியாக
அப்பா 8 அடி பாஞ்சா, மகன் 16 அடி பாய்வது போல, அப்பா விக்ரமுக்கு போட்டியாக தானும் முரட்டுத்தனமாக வொர்க்கவுட் செய்து சிக்ஸ்பேக் வைத்து வேற லெவலில் தனது உடலை மாற்றி உள்ளார் த்ருவ் விக்ரம். ஆனால், தனது முழுத் தோற்றத்தை ரசிகர்கள் பார்க்கக் கூடாது என்பதற்காக நிழல் படர்ந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications