ஆகஸ்ட்டில் அடுத்த அதிரடி...மாரி செல்வராஜ் படத்திற்காக தயாராகும் துருவ் விக்ரம்

சென்னை : டைரக்டர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டது. சியான் படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு, இந்த புதிய படத்தின் வேலைகளை துருவ் விக்ரம் துவக்க உள்ளார்.

துருவ் விக்ரம், தனது தந்தை விக்ரமுடன் இணைந்து சியான் 60 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜுலை மாத இறுதியுடன் நிறைவடைய உள்ளது.

ஆகஸ்ட்டில் மாரி செல்வராஜ் படம்

ஆகஸ்ட்டில் மாரி செல்வராஜ் படம்

இதனால் மாரி செல்வராஜ் உடனான படத்தை துருவ் விக்ரம், ஆகஸ்ட் மாதத்தில் துவக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்படுகிறதாம். அதுவும் கபடி விளையாட்டை பற்றியதாம்.

கபடி வீரர் பயோபிக்

கபடி வீரர் பயோபிக்

கபடி வீரர் ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட உள்ளதாம். தமிழகத்தின் கிராமத்தில் இருந்து வந்து விளையாட்டில் சாதித்த விளையாட்டு வீரர் பற்றியதாம். பயோபிக் ஒன்றில் துருவ் விக்ரம் நடிப்பது இது முதல் முறையாகும்.

பயிற்சி எடுக்கிறார் துருவ்

பயிற்சி எடுக்கிறார் துருவ்

தேசிய அளவில் உயர்ந்து, ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்று, நாட்டிற்கு பெருமை சேர்க்கும் ஒரு வீரரை பற்றிய கதையாம். இந்த படத்திற்காக துருவ் விக்ரம் விளையாட்டு பயிற்சி எடுத்துக் கொள்ள போகிறாராம். விரைவில் துருவ் தனது பயிற்சியை துவக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பா.ரஞ்சித் தயாரிக்கும் படம்

பா.ரஞ்சித் தயாரிக்கும் படம்

இந்த படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்க போகிறாராம். ஆதித்ய வர்மா, சியான் 60 படங்களுக்கு பிறகு துருவ் விக்ரம் நடிக்கும் மூன்றாவது படம் இது. படப்பிடிப்பிற்கு முன் படத்தில் இணையும் மற்ற நடிகர்- நடிகைகள் பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X