சியான் 60.. தந்தையுடன் இணைந்து நடிக்க தயாராகும் த்ருவ் விக்ரம்.. இயக்குநர் யார் தெரியுமா?
சென்னை: சியான் விக்ரமின் 60வது படத்தில் அவருடன் அவரது மகன் த்ருவ் விக்ரமும் இணைந்து நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
கோப்ரா, பொன்னியின் செல்வன், துருவ நட்சத்திரம், மஹாவீர் கர்ணன் படங்களை தொடர்ந்து சியான் 60 படம் கேங்ஸ்டர் படமாக உருவாகப் போகிறதாம்.
இந்த படத்தை தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் ஒருவர் இயக்கப் போவதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மிரட்டல் நடிப்பு
விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக் மூலம் கோலிவுட்டில் காலடி பதித்தார் சியான் விக்ரமின் மகன் த்ருவ் விக்ரம். தந்தையை போலவே பன்முகத் தன்மை கொண்ட த்ருவ் விக்ரம், அவரை போலவே மிரட்டலாக தன்னாலும் நடிக்க முடியும் என முதல் படத்திலேயே நடித்தும் காண்பித்தார்.

எதிர்பார்த்த கூட்டணி
சியான் விக்ரமும், த்ருவ் விக்ரமும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், 'சியான் 60' படத்தில் இந்த கூட்டணி இணைந்து நடிக்கப் போவதாக உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல் அறிந்த விக்ரம் ரசிகர்கள் செம குஷியில் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

நடிப்புக்கு குட்பை
சமீபத்தில், தனது மகன் த்ருவ் விக்ரமின் சினிமா எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நடிப்புக்கு குட்பை சொல்லப் போகிறார் சியான் விக்ரம் என்ற வதந்தி ஒன்று வைரலாகி, விக்ரம் ரசிகர்களை ரொம்பவே கடுப்பேற்றியது. பின்னர், அது முற்றிலும் போலி செய்தி என்று விக்ரம் தரப்பில் கூறப்பட்டு ரசிகர்களை நிம்மதியடைய செய்தது.

பிரம்மாண்ட படங்கள்
சியான் விக்ரம் நடிப்பில் அடுத்தடுத்து உருவாகி வரும் படங்கள் எல்லாம் தமிழ் சினிமா ரசிகர்களால் வேற லெவலில் கொண்டாடப்படும் என்பது தற்போதே தெளிவாக தெரிகிறது. அஜய் ஞானமுத்து இயக்கும் கோப்ரா, மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், மலையாள இயக்குநரின் 300 கோடி பட்ஜெட் படம் மஹாவீர் கர்ணன் மற்றும் கெளதம் மேனனின் துருவ நட்சத்திரம் என அடுத்த கட்டத்திற்கு விக்ரம் நகர உள்ளார்.

இயக்குநர் யார்
கேங்ஸ்டர் படம் என்றாலே தற்போது இருக்கும் இயக்குநர்களில் தீயாய் வேலை செய்வது நம்ம கார்த்திக் சுப்புராஜ் தான். ஜிகர்தண்டா, பேட்ட, தனுஷின் ஜகமே தந்திரம் படங்களை தொடர்ந்து சியான் விக்ரமின் 60வது படத்தையும் இவரே இயக்க உள்ளாராம். த்ருவ் விக்ரமும் இணைந்து நடிக்கும் நிலையில், திரைக்கதை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்பவே ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.


Click it and Unblock the Notifications











