Dhruva Natchathiram: துருவ நட்சத்திரம் பாடலை வெளியிட்ட AR ரஹ்மான்... கம்பேக் கொடுத்த ஹாரிஸ் ஜெயராஜ்
சென்னை: விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் வரும் 24ம் தேதி வெளியாகிறது.
கெளதம் மேனன் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்நிலையில் துருவ நட்சத்திரம் படத்தில் இருந்து 'நரச்ச முடி' என்ற பாடலை ஏஆர் ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.
மெலடியாக உருவாகியுள்ள இப்பாடல் ஹாரிஸ் ஜெயராஜ் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்துள்ளது.

ஏஆர் ரஹ்மான் வெளியிட்ட நரச்ச முடி பாடல்
விக்ரம் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கியுள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். கடந்த 5 ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த இந்தப் படம், வரும் 24ம் தேதி திரையரங்களில் வெளியாகிறது. துருவ நட்சத்திரம் பட்ஜெட் பிரச்சினையால் கிடப்பில் இருந்ததால், இந்தப் படத்தை வெளியிடுவதற்காகவே நடிக்க ஆரம்பித்தார் கெளதம்.
ஸ்பை த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம், தரமான ஆக்ஷன் ட்ரீட்டாக இருக்கும் என சொல்லப்படுகிறது. விக்ரம் உடன் ரிது வர்மா, சிம்ரன், ராதிகா, பார்த்திபன், விநாயகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். துருவ நட்சத்திரம் ஷூட்டிங் தொடங்கியதில் இருந்தே இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. இந்நிலையில் இப்போது ரிலீஸுக்கும் ரெடியாகிவிட்டது.
இதனையடுத்து துருவ நட்சத்திரம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சில வாரங்களுக்கு முன்னர் வெளியானது. அதன் தொடர்ச்சியாக துருவ நட்சத்திரம் ட்ரெய்லரையும் படக்குழு வெளியிட்டது. விக்ரமின் ஆக்ஷன் ட்ரீட்டாக வெளியான இந்த ட்ரெய்லர், படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்நிலையில் தற்போது நரச்ச முடி என்ற பாடல் துருவ நட்சத்திரம் படத்தில் இருந்து வெளியாகியுள்ளது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்தப் பாடலை ஏஆர் ரஹ்மான் வெளியிட்டுள்ளார். வழக்கம்போல பாடல் வரிகளை தாமரை எழுத, செம்ம ஸ்மார்ட்டான மெலடியாக உருவாகியுள்ளது. ஸ்ரீலேகா பார்த்தசாரதி இந்தப் பாடலை பாடியுள்ளார். கெளதம் மேனன் - ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் சூப்பரான மெலடியாக 'நரச்ச முடி' பாடல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து ஹாரிஸ் ஜெயராஜ் ரசிகர்கள் இந்தப் பாடலை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதேபோல், கெளதம் மேனனுக்காக ஏஆர் ரஹ்மான் இந்தப் பாடலை வெளியிட்டது, இசைப்புயலின் ரசிகர்களிடமும் கவனம் ஈர்த்து வருகிறது.


Click it and Unblock the Notifications











