Theatre release: துருவ நட்சத்திரம் முதல் எமர்ஜென்ஸி வரை.. இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்கள்!
சென்னை: கடந்த வாரம் தீபாவளி பண்டிகைக்கு ஜப்பான், ஜிகர்தாண்டா டபுள் எக்ஸ் திரைப்படங்கள் வெளியாகின. இதில், கார்த்தி நடித்த ஜப்பான் திரைப்படம் வந்த வேகத்தில், பெட்டிக்குள் சென்றுவிட்டதால், ஜிகர்தாண்டா டபுள் எக்ஸ் சோலோ பர்ஃபாமென்ஸ் செய்து வசூலை அள்ளியது.
அந்த வகையில் இந்த வாரம் என்னென்ன திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை பார்க்கலாம்.

துருவ நட்சத்திரம்: கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். விக்ரம் , ரிது வர்மா, விநாயகன், ஆர் பார்த்திபன், ராதிகா, டி டி நீலகண்டன், உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் படம் கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்குப் பிறகு நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. துருவ நட்சத்திரம் படத்தின் கதையை தான் முதலில் சூர்யாவிடம் சொன்னதாகவும் சூர்யா இந்தப் படத்தின் கதையை நிராகரித்துவிட்டதாகவும் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.
அவள் பெயர் ரஜ்னி: மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் அவள் பெயர் ரஜ்னி என்ற படம் உருவாகி இருக்கிறது. தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தை வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் நமிதா பிரமோத், அஸ்வின் குமார், ரெபா மோனிகா ஜான் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இத்திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை அதாவது 24ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.
80ஸ் பில்டப்: குலேபகாவலி, ஜாக்பாட் உள்ளிட்ட படங்களை இயக்கிய கல்யாண் '80ஸ் பில்டப்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் சந்தானம் நாயகனாக நடித்திருக்கிறார். மேலும், ஆனந்த் ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, மயில்சாமி, முனீஸ் காந்த், கூல் சுரேஷ், சூப்பர்குட் சுப்பிரமணி, தங்கதுரை, கும்கி அஸ்வின், நெபு சாமி, கலைராணி என பல்வேறு முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வரும் 24ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.
சில நொடிகளில்: வினய் பரத்வாஜ் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, ராஜ் வரதனாக முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் சில நொடிகளில். புன்னகை பூ கீதா மேதா வரதனாகவும், யாஷிகா ஆனந்த் மாயா பிள்ளை என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மிஸ்ட்ரி, சஸ்பென்ஸ், த்ரில்லர் திரைப்படமாக உருவாகி உள்ள இத்திரைப்படம் நவம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
எமர்ஜென்ஸி: கங்கனா ரனாவத் இயக்கி நடித்துள்ள எமர்ஜென்ஸி திரைப்படம் நவம்பர் 24ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. தலைவி படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதாவின் பாத்திரத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து 'மணிகர்ணிகா' படத்தில் வீராங்கனை ராணி லட்சுமி பாயாக நடித்திருந்த கங்கனா இப்படத்தில் இந்திரா காந்தியாக நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











