Dhruva Natchathiram: துருவ நட்சத்திரம் நாளை ரிலீஸ் ஆகுமா?.. கவுதம் மேனனுக்கு கடைசி நேர கெடு!

சென்னை: நவம்பர் 24ம் தேதி துருவ நட்சத்திரம் ஒரு வழியாக வெளியாகி விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை அந்த படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கவில்லை. மேலும், கடைசி நேரத்தில் இயக்குநர் கவுதம் மேனனுக்கு கெடு விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

6 ஆண்டுகளுக்கு முன்னதாக ஆரம்பிக்க துருவ நட்சத்திரம் திரைப்படம் பல தடைகளை சந்தித்து பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் கடைசி நேரத்தில் ரிலீஸ் ஆகாமல் கடந்த சில ஆண்டுகளாக தள்ளிப் போனது.

Dhruva Natchathiram faces last minute release struggle due to this reason

இந்நிலையில், நாளை வெளியாகி விடும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நாளை வெளியாகும் படங்கள்: சந்தானம் நடித்துள்ள 80ஸ் பில்டப், யோகி பாபுவின் குய்கோ, ரிச்சர்ட் ரிஷி, யாஷிகா ஆனந்த் நடித்துள்ள சில நொடிகளில் உள்ளிட்ட படங்கள் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சியான் விக்ரம், சிம்ரன், ரிது வர்மா, பார்த்திபன் மற்றும் விநாயகம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படம் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை அந்த படத்திற்கான டிக்கெட் புக்கிங் ஆரம்பிக்கப்படவில்லை.

2 கோடி தரணும்: ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு நாளை காலை 10.30 மணிக்குள் 2 கோடி ரூபாயை இயக்குநர் கவுதம் மேனன் தர வேண்டும் என்றும் அப்போது தான் துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்க முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை போட்டுள்ளது. கடைசி நேரத்தில் 2 கோடி ரூபாய் பணத்தைக் கொடுத்து படத்தை கவுதம் மேனன் ரிலீஸ் செய்வாரா? அல்லது மீண்டும் துருவ நட்சத்திரம் ரிலீஸ் தேதி தள்ளிப் போகுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

சியான் விக்ரம் உதவுவாரா?: கவுதம் மேனன் துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்ய சியான் விக்ரம் உதவுவாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. படத் தயாரிப்பில் ஈடுபட்டு பல இடங்களில் கடன் வாங்கி சிக்கலில் கவுதம் மேனன் சிக்கிக் கொண்டது தான் அவர் இயக்கிய படங்கள் எல்லாம் ரிலீஸ் ஆகாமல் சிக்கிக் கொள்ள காரணம் என்றும் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X