துருவ நட்சத்திரம் ரிலீஸ் எப்போ தெரியுமா? மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு இப்படியொரு சிக்கல்?

சென்னை: பா. ரஞ்சித் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் தங்கலான் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்கும் போது ஏற்பட்ட விபத்து காரணமாக சியான் விக்ரம் சில வாரங்களாக ஓய்வில் இருந்து வருகிறார்.

எத்தனை நாட்கள் வேண்டுமானால் ரெஸ்ட் எடுத்துட்டு ஷூட்டிங்கிற்கு மெதுவா வாங்க என பா. ரஞ்சித் சொல்லி விட்டாராம்.

அந்த கேப்பை பயன்படுத்திக் கொண்டு தற்போது துருவ நட்சத்திரம் படத்தில் 4 நாட்கள் நடிக்க வேண்டிய காட்சிகளை நடித்துக் கொடுத்து விட்டார் விக்ரம் என்றும் படம் வெளியாகப்போகும் தேதி குறித்த தகவல்களும் வெளியாகி உள்ளதாக கூறுகின்றனர்.

Dhruva Natchathiram movie will release on this date and clash with Maaveeran?

சியான் விக்ரமின் துருவ நட்சத்திரம்: பல ஆண்டுகளுக்கு முன்பு உருவான துருவ நட்சத்திரம் கடைசி நேரத்தில் சில பஞ்சாயத்து காரணமாக அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

இயக்குநர் கவுதம் மேனன் ஏகப்பட்ட கடன்களில் சிக்கி இருந்த நிலையில், அடுத்தடுத்த படங்களில் அவரால் கவனம் செலுத்த முடியாமல் போனது. அதன் காரணமாகவே பல படங்களில் தொடர்ந்து அவர் நடித்து வருகிறார் என்றும் கூறுகின்றனர்.

போஸ்ட் ப்ரொடக்‌ஷன் ஓவர்: பொன்னியின் செல்வன் படங்களில் ஆதித்த கரிகாலனாக மிரட்டிய சியான் விக்ரம் அடுத்ததாக பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலானாக நடித்து வருகிறார்.

சியான் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான மேக்கிங் வீடியோவில் சியான் விக்ரமின் லுக்கை பார்த்தே ரசிகர்கள் மிரண்டு போன நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்து காரணமாக விக்ரமுக்கு விலா எலும்பில் அடிபட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், அந்த கேப்பை பயன்படுத்திக் கொண்டு ஓய்வெடுத்து வந்த விக்ரம் கவுதம் மேனனுக்காக துருவ நட்சத்திரம் படத்தின் இறுதிக்கட்ட காட்சிகளையும் நடித்து கொடுத்து விட்டார் எனக் கூறுகின்றனர். மேலும், போஸ்ட் ப்ரொடக்‌ஷன்கள் நிறைவடைந்து படம் ரிலீஸுக்கே ரெடியாகி விட்டதாம்.

Dhruva Natchathiram movie will release on this date and clash with Maaveeran?

எப்போ ரிலீஸ்: வரும் ஜூலை மாதம் 14ம் தேதி ஜான் ரசிகர்களை சந்திப்பார் என தகவல்கள் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன. #DhruvaNatchathiram ஹாஷ்டேக்கையும் ரசிகர்கள் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

செம ஸ்டைலிஷ் ஆன ஏஜென்ட்டாக சியான் விக்ரமை இந்த படத்தில் செதுக்கி இருக்கிறார் கவுதம் மேனன். ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படம் சியான் விக்ரமுக்கு இன்னொரு சூப்பர் ஹிட் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் புதிய ட்ரெய்லர் ஒன்றும் ரிலீஸ் செய்யப்பட்டு அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்கின்றனர்.

சிவகார்த்திகேயனுக்கு மீண்டும் சிக்கல்: சியான் விக்ரமின் துருவ நட்சத்திரம் வரும் ஜூலை 14ம் தேதி வெளியானால் அதே நாளில் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ள சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்துக்கு பெரிய சிக்கல் ஏற்படும் என்கின்றனர்.

ஏற்கனவே ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ஜெயிலர் படத்துக்காக ரிலீஸ் தேதியை சிவகார்த்திகேயன் மாற்றிய நிலையில், தற்போது சியான் விக்ரமுக்காக மாற்றுவாரா? இல்லை அவருடன் துணிந்து மோதுவாரா என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X