Dhruva Natchathiram Trailer - செம மாஸாக வந்திருக்கும் துருவ நட்சத்திரம் ட்ரெய்லர்
சென்னை: Dhruva Natchathiram Trailer, (துருவ நட்சத்திரம் ட்ரெய்லர்) விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது.
கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் இயக்கிய காக்க காக்க, மின்னலே, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தவை. இதனால் இவருக்கென்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர். தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் இயக்குநர் என்ற பெயரையும் அவர் பெற்றவர்.

நடிப்பில் கவனம்: இவர் கடைசியாக சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கினார். இந்தப் படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இருப்பினும் கௌதம் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திவருகிறார். அந்தவகையில் அவர் ருத்ரதாண்டவம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், பத்து தல, கருமேகங்கள் கலைகின்றன, லியோ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
துருவ நட்சத்திரம்: இதற்கிடையே அவர் விக்ரமை வைத்து துருவ நட்சத்திரம் படத்தை சில வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்தார் . இதில் விக்ரமுடன் சிம்ரன், பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, ராதிகா சரத்குமார், டிடி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார்.
எதிர்பார்ப்பில் துருவ நட்சத்திரம்: இந்தப் படமானது கடந்த 2017ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் சில பிரச்னைகளால் துருவ நட்சத்திரத்தின் நிலை என்னவென்றே தெரியாமல் இருந்தது. நிலைமை இப்படி இருக்க சமீபத்தில் விக்ரமும், கௌதமும் சந்தித்து துருவ நட்சத்திரத்தின் அடுத்தக்கட்ட வேலைகள் குறித்து ஆலோசித்தனர். மேலும் படத்தை முழுவதும் பார்த்த விக்ரமுக்குப் அடம் ரொம்பவே பிடித்துவிட்டதாகவும் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவும் தயாராக இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
ட்ரெய்லர்: இந்நிலையில் துருவ நட்சத்திரம் படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது. ட்ரெய்லர் பக்கா ஸ்டைலிஷான ஆக்ஷன் பேக்கேஜாக அமைந்திருக்கிறது. குறிப்பாக விக்ரமின் ஸ்க்ரீன் பிரெசென்ஸ் ரசிகர்களை அசரவைக்கும் அளவுக்கு இருப்பதாக அவரது ரசிகர்கள் தெரிவித்துவருகின்றனர்.

அதுமட்டுமின்றி பேஸ்மெண்ட் என்ற ஒரு டீம் இந்திய அரசால் உருவாக்கப்படுவது போலும் அந்த டீமில் விக்ரம், சிம்ரன், பார்த்திபன், டிடி உள்ளிட்டோர் இருப்பது போன்றும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. தற்போது துருவ நட்சத்திரம் ட்ரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுவருகிறது.


Click it and Unblock the Notifications











