Dhruva Natchathiram: துருவ நட்சத்திரம் OTT ரைட்ஸ்... நம்பிக்கை கொடுத்த ப்ரீ ரிலீஸ் பிஸினஸ்!
சென்னை: சீயான் விக்ரம் - கெளதம் மேனன் கூட்டணியில் உருவான திரைப்படம் துருவ நட்சத்திரம்.
2016ம் ஆண்டு தொடங்கிய இந்தப் படம் வரும் 24ம் தேதி ரிலீஸாகவுள்ளது.
பலகட்டப் போராட்டங்களுக்குப் பின்னர் வெளியாகும் துருவ நட்சத்திரம் படத்தின் ப்ரீ ரிலீஸ் பிஸினஸ் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
முதற்கட்டமாக இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது.

துருவ நட்சத்திரம் ஓடிடி ரைட்ஸ்: விக்ரம் தற்போது பா ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களை மிரள வைத்திருந்தது. இதனையடுத்து விரைவில் தங்கலான் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம் விக்ரமின் துருவ நட்சத்திரம் ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது.
விக்ரம் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கியுள்ள துருவ நட்சத்திரம், ஸ்பை திரில்லரில் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. கெளதம் மேனனின் ட்ரீம் ப்ராஜக்ட்டான துருவ நட்சத்திரம், 2016ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சீயான் விக்ரமுடன் ரிது வர்மா, சிம்ரன், ராதிகா, பார்த்திபன், விநாயகன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்து வந்தனர். ஆனால், ஒருகட்டத்தில் பட்ஜெட் பிரச்சினை காரணமாக துருவ நட்சத்திரம் கிடப்பில் கிடந்தது.
இதனால் கெளதம் மேனன் அடுத்தடுத்து படங்கள் இயக்க வாய்ப்பு இல்லாமல் தவித்தார். அதேநேரம் நடிப்பிலும் கவனம் செலுத்த தொடங்கினார். இப்படி பல படங்களில் நடித்து அதன்மூலம் சம்பாதித்த பணத்தை வைத்து துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்யவுள்ளார். இப்போதும் கூட பல தடைகள் கடந்து தான் வெளியாகவுள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் ஓடிடி ரைட்ஸிலும் பிரச்சினை இருந்தது.
இதன் காரணமாகவே சமீபத்தில் கூட இரண்டு மூன்று முறை துருவ நட்சத்திரம் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஓடிடி ரைட்ஸ் சிக்கல்களும் தீர்ந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அதன்படி துருவ நட்சத்திரம் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் எதிர்பார்த்ததை விடவும் அதிகமான விலைக்கு பிஸினஸ் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











