Dhruva Natchathiram: துருவ நட்சத்திரம் ரிலீஸ் பிரச்சினைக்கு சிம்பு தான் காரணமா..? நொந்துபோன கெளதம்!

சென்னை: விக்ரம் - கெளதம் மேனன் கூட்டணியில் உருவான துருவ நட்சத்திரம், இன்று (நவ.24) வெளியாகவிருந்தது.

ஏற்கனவே பல தடைகளை கடந்து வெளியாகவிருந்த இந்தப் படம், இப்போதும் ரிலீஸில் இருந்து பின்வாங்கியுள்ளது.

ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் துருவ நட்சத்திரம் படத்தை திரையிட அனுமதிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.

இந்நிலையில், துருவ நட்சத்திரம் ரிலீஸாகாமல் போனதற்கு நடிகர் சிம்புவும் காரணம் என சொல்லப்படுகிறது.

 Dhruva Natchathiram: Simbu is also responsible for Dhruva Natchathiram release issues

சிம்புவால் கெளதம் மேனனுக்கு வந்த பிரச்சினை: சியான் விக்ரம் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் துருவ நட்சத்திரம். கெளதம் மேனன் இயக்கத்தில் ஸ்பை த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படம், இன்று ரிலீஸாகவிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் ஃபைனான்ஸ் பிரச்சினை காரணமாக துருவ நட்சத்திரம் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது. 2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம் இப்போது வரை தொடர்ந்து பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.

இந்தப் படத்தை வெளியிடுவதற்காகவே படங்களில் நடிக்கத் தொடங்கினார் கெளதம் மேனன். அந்தளவிற்கு துருவ நட்சத்திரம் படத்தை தனது ட்ரீம் மூவியாக பார்க்கிறார் கெளதம். சிம்புவை வைத்து 'சூப்பர் ஸ்டார்' என்ற படத்தை இயக்கவிருந்தாராம் கெளதம் மேனன். இதற்காக ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் கெளதம் மேனன் 2.40 கோடி ரூபாய் பணம் வாங்கியுள்ளார்.

ஆனால், கெளதம் மேனன் சொன்னபடி சூப்பர் ஸ்டார் படமும் உருவாகவில்லை, அவரும் 2.40 கோடி ரூபாயை ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால், தங்களுக்கு பணம் தராமல் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடக் கூடாது என அந்நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இதனையடுத்து ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய 2.40 கோடி பணத்தை, வரும் திங்கள் அல்லது புதன் கிழமைக்குள் கொடுத்துவிடுவேன் என கெளதம் உறுதியளித்துள்ளார்.

முன்னதாக துருவ நட்சத்திரம் படத்தை சொன்னபடி ரிலீஸ் செய்துவிட வேண்டும் என கெளதம் மேனன் முயற்சி செய்துள்ளார். அதற்காக 23ம் தேதி இரவு தனியார் நட்சத்திர விடுதியில் ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினாராம். அப்போது கெளதம் மேனனுக்கு கடன் கொடுத்த மேலும் பலரும் அங்கு சென்றுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நிச்சயம் பணம் தருவதாக கெளதம் கூறியுள்ளார்.

ஆனால், கடைசியாக அங்கு நடிகர் சிம்புவும் சென்றதாகவும், வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்ததற்காக தனக்கும் சம்பள பாக்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளாராம். அதனை கொடுத்துவிட்டு துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்யலாம் என கெளதம் மேனனிடம் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் கெளதம் மேனன் ரொம்பவே நொந்து போய்விட்டாராம். விண்ணைத்தாண்டி வருவாயா படம் மூலம் சிம்புவுக்கு கம்பேக் கொடுத்தவர் கெளதம் மேனன்.

 Dhruva Natchathiram: Simbu is also responsible for Dhruva Natchathiram release issues

அதனைத் தொடர்ந்து அச்சம் என்பது மடமையடா, வெந்து தணிந்தது காடு படங்களிலும் சிம்பு - கெளதம் மேனன் கூட்டணி இணைந்தது குறிப்பிடத்தக்கது. சிம்புவை வைத்து சூப்பர் ஸ்டார் என்ற படத்தை இயக்கவிருந்ததால் தான் கெளதம் மேனன் தற்போது ஃபைனான்ஸ் பிரச்சினையில் சிக்கியுள்ளார். இந்நிலையில் சிம்புவும் தற்போது வெந்து தணிந்தது காடு படத்தின் சம்பள பாக்கியை கேட்டுள்ளது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

வெந்து தணிந்தது காடு படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் கெளதம் மேனன் தான் தயாரித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர் சிம்புவால் தான் நான் மீண்டு வந்தேன் என கெளதம் மேனன் ஒரு பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X