இம்மாதம் வெளியாகிறது துருவ நட்சத்திரம் பாடல்: இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹாரிஸ் ஜெயராஜ்
Recommended Video

சென்னை: துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் சிங்கிள் டிராக் இம்மாதம் வெளியாக உள்ளது.
கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். ஸ்பை த்ரில்லராக தயாராகியுள்ள இப்படத்தின் சிங்கிள் டிராக் இம்மாதம் வெளியாகும் என்று இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள ஹாரிஸ் ஜெயராஜ், அவர் இசையமைத்துள்ள தேவ் திரைப்படத்திற்குப் பிறகு துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் "ஒரு மனம்..." என்ற சிங்கிள் டிராக் வெளியாகும் என பதிவிட்டுள்ளார். மேலும் தீபாவளி வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளார்.
துருவ நட்சத்திரம் திரைப்படம் கௌதம் மற்றும் விக்ரம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்ரமின் திரைப்பயணத்தில் ஒரு சிறந்த படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
இப்படத்தில், ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன், வம்சி கிருஷ்ணா, ஷ்ரவந்தி சாய்நாத், திவ்ய தர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர். அடுத்த மாதம் இத்திரைப்படம் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











