Dhruva Natchathiram: துருவ நட்சத்திரம் பஞ்சாயத்து ஓவர்... ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் செய்த படக்குழு!

சென்னை: விக்ரம் - கெளதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம்.

கடந்த 2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் படம் இப்போது தான் ரிலீஸுக்கு ரெடியாகியுள்ளது.

அதன்படி, வரும் 24ம் தேதி ரிலீஸாகவிருந்த துருவ நட்சத்திரம் ஃபைனான்ஸ் பிரச்சினை காரணமாக ஒத்தி வைக்கப்படலாம் என சொல்லப்பட்டது.

 Dhruva Natchathiram: Vikrams Dhruva Natchathiram is confirmed to be released on November 24th

இதனால் ரசிகர்கள் குழப்பத்துடன் காத்திருந்த நிலையில், தற்போது துருவ நட்சத்திரம் சொன்னபடி வெளியாகும் என கன்ஃபார்ம் ஆகியுள்ளது.

துருவ நட்சத்திரம் ரிலீஸ் தேதி கன்ஃபார்ம்
சியான் விக்ரம் - கெளதம் மேனன் கூட்டணியில் 2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட திரைப்படம் துருவ நட்சத்திரம். விக்ரம் உடன் சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, பார்த்திபன், விநாயகன் உள்ளிட்ட பலர் நடித்தனர். ஆனால், ஃபைனான்ஸ் பிரச்சினை, கொரோனா ஊரடங்கு போன்றவை காரணமாக துருவ நட்சத்திரம் படப்பிடிப்பு ட்ராப் ஆனது.

பின்னர் இந்தப் படத்துக்காகவே நடிக்கத் தொடங்கினார் கெளதம் மேனன். பல படங்களில் நடித்து அதில் கிடைத்த சம்பளத்தை வைத்து துருவ நட்சத்திரம் படப்பிடிப்பை முடித்துவிட்டார். ஆனாலும் இந்தப் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ், ஓடிடி ரைட்ஸ் பிஸினஸ் ஆகாததால் ரிலீஸ் தேதி கன்ஃபார்ம் ஆவதில் பிரச்சினைகள் இருந்ததாக சொல்லப்பட்டது.

இதனையடுத்து துருவ நட்சத்திரம் ஓடிடி ரைட்ஸை நெட்பிளிக்ஸ் தளமும், தொலைக்காட்சி உரிமையை கலைஞர் டிவியும் வாங்கின. இதன் பின்னர் துருவ நட்சத்திரம் நவம்பர் 24ம் தேதி ரிலீஸாகும் என படக்குழு அறிவித்தது. அதற்கான ப்ரொமோஷன் வேலைகளும் அடுத்தடுத்து நடைபெற்றன. இன்னொரு பக்கம் துருவ நட்சத்திரம் பாடல்கள், ட்ரெய்லர் வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தின.

இந்நிலையில் துருவ நட்சத்திரம் படத்திற்கு கடைசி நேரத்தில் ஃபைனான்ஸ் பிரச்சினை ஏற்பட்டதாகவும், இதனால் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகின. இதனால் விக்ரம் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இந்த சூழலில் தற்போது துருவ நட்சத்திரம் ரிலீஸில் பிரச்சினை இல்லையென்றும், சொன்னபடி வரும் (நவம்பர்) 24ம் தேதி இந்தப் படம் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.

அதாவது அமெரிக்காவில் துருவ நட்சத்திரம் படத்திற்கான அட்வான்ஸ் புக்கிங் ஓபனானது. அதேபோல், தமிழ்நாட்டிலும் பேப்பர் விளம்பரங்களில் துருவ நட்சத்திரம் ரிலீஸ் தேதி நவம்பர் 24 என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், ஆன்லைனில் துருவ நட்சத்திரம் புக்கிங் ஓபன் ஆகாமல் உள்ளது. ஆனால் ரிலீஸுக்கு இன்னும் ஒருநாள் இருப்பதால் கண்டிப்பாக துருவ நட்சத்திரம் ரிலீஸ் கன்ஃபார்ம் தான் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சீயான் விக்ரம் - கெளதம் மேனன் கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ள துருவ நட்சத்திரம், ஸ்பை த்ரில்லர் ஜானரில் செம்ம ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ளது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தாலும், தற்போது வெளியாகவுள்ள ஃபைனல் வெர்ஷனில் அவரது காட்சிகள் இருக்காது என சொல்லப்படுகிறது. துருவ நட்சத்திரம் படம் மூலம் கெளதம் மேனன் - ஹரீஸ் ஜெயராஜ் காம்போ நீண்ட இடைவேளைக்குப் பிறகு இணைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X