Dhruva Natchathiram: மீண்டும் ரிலீஸ் பிரச்சினையில் துருவ நட்சத்திரம்... கடைசி நேரத்தில் புது சிக்கல்
சென்னை: கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் ஜூலை மாதம் வெளியாகும் என சொல்லப்பட்டது.
சுமார் 7 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் கிடக்கும் துருவ நட்சத்திரம் படத்திற்காக விக்ரம் ரசிகர்கள் காத்திருந்தனர்.
ஆனால், இந்தப் படம் வெளியாவதில் கடைசி நேரத்தில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
திடீரென துருவ நட்சத்திரம் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது விக்ரம் ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

மீண்டும் ரிலீஸ் பிரச்சினையில் துருவ நட்சத்திரம்: சீயான் விக்ரம் தற்போது பா ரஞ்சித்தின் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்து மிரட்டியிருந்தார். அதேநேரம் விக்ரம் முதன்முறையாக கெளதம் மேனன் இயக்கத்தில் நடித்த துருவ நட்சத்திரம் 7 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்தது.
2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டாலும், சில பிரச்சினைகளால் ரிலீஸாகாமல் இருந்தது. ஆனால், சில தினங்களுக்கு முன்னர் துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் குறித்து இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ட்வீட் செய்திருந்தார். அதன்படி ஜூலை மாதம் இந்தப் படம் ரிலீஸாகும் என சொல்லப்பட்டது. இதனால் விக்ரம் ரசிகர்கள் ரொம்பவே உற்சாகத்தில் இருந்தனர்.
விக்ரம் - கெளதம் மேனன் காம்போவை முதன்முறையாக பெரிய திரையில் பார்க்க வேண்டும் என சினிமா ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இப்போதும் துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக சொல்லப்படுகிறது. அதாவது துருவ நட்சத்திரம் படத்தின் சாட்டிலைட், ஓடிடி ரைட்ஸ் எதுவும் இன்னும் விற்பனை ஆகவில்லையாம். இதுதான் துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸுக்கு மீண்டும் சிக்கலாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
முன்னதாக கடந்த மாதம் 17ம் தேதி மலேசியாவில் நடைபெற்ற ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சியில் துருவ நட்சத்திரம் அப்டேட் வெளியாகும் என சொல்லப்பட்டது. இந்நிகழ்ச்சியில் துருவ நட்சத்திரம் படக்குழுவினர் கலந்துகொண்டு படத்தின் ட்ரெய்லர், ஃபர்ஸ்ட் சிங்கிள் இரண்டையும் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சாட்டிலைட், ஓடிடி பிரச்சினையால் தான் அதுவும் வெளியாகவில்லை என தெரிகிறது.
கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் உடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, சிம்ரன், பார்த்திபன், ராதிகா சரத்குமார், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஆக்ஷன் ஜானரில் ஸ்பை திரில்லர் படமாக உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் ரிலீஸ் தள்ளிப்போனது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. ஆனாலும், இதுகுறித்து படக்குழுவினர் எதுவும் அபிஸியலாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











