Leo: லியோவுடன் மோதும் துருவ நட்சத்திரம்..? விஜய்க்கு சைலண்ட்டாக செக் வைத்த சீயான் விக்ரம்!

சென்னை: விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ, அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. கோலிவுட்டின் மிகப்பெரிய இன்டஸ்ட்ரி ஹிட் படமாக லியோ அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், லியோவுக்குப் போட்டியாக இன்னும் சில மாஸ் ஹீரோக்களின் படங்களும் அக்டோபர் 19ம் தேதி ரிலீஸாகவுள்ளதாம். முக்கியமாக விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் லியோவுடன் மோதவுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

 Dhruva Natchathiram: Vikrams Dhruva Natchathiram to clash with Leo on October 19

லியோவுடன் மோதும் துருவ நட்சத்திரம்: விக்ரம் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கியுள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். 2017ம் ஆண்டு தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு, பட்ஜெட் பிரச்சினை காரணமாக பாதியிலேயே நின்றது. அதன்பின்னர் மீண்டும் படப்பிடிப்பைத் தொடர்ந்த கெளதம் மேனன், தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் பிஸியாகிவிட்டார். இதனிடையே துருவ நட்சத்திரம் படத்தில் இருந்து பாடல்களும் வெளியாகின.

ஜான் என்ற ஸ்பை கேரக்டரில் விக்ரம் நடித்துள்ளார். அவருடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விக்ரம் - கெளதம் கூட்டணி முதன்முறையாக இணைந்ததால் துருவ நட்சத்திரம் மீது அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஸ்பை த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் ரசிகர்களுக்கு ஆக்‌ஷன் ட்ரீட்டாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது துருவ நட்சத்திரம் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி இந்தப் படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து அபிஸியல் அப்டேட் வெளியாகவில்லை என்றாலும், சமூக வலைத்தளங்களில் துருவ நட்சத்திரம் ரிலீஸ் தேதி ட்ரெண்டிங்கில் உள்ளது. அதேநாளில் விஜய்யின் லியோ திரைப்படம் வெளியாகவுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. லியோவுக்குப் போட்டியாக துருவ நட்சத்திரம் என ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

கடந்த 10ம் தேதி வெளியான ரஜினியின் ஜெயிலர் படத்துக்கு முதல் வாரம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது. அதனால், விஜய்யின் லியோ ஜெயிலரை விடவும் அதிகம் வசூலிக்கும் என கோலிவுட்டே நம்பிக்கையுடன் காத்திருக்கிறது. இந்த சூழலில் லியோவுக்குப் போட்டியாக துருவ நட்சத்திரம் வெளியானால், பாக்ஸ் ஆபிஸில் கடும் மோதல் இருக்கும் என சொல்லப்படுகிறது.

ஏற்கனவே கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரின் கோஸ்ட், டோலிவுட் மாஸ் ஹீரோ பாலகிருஷ்ணா நடிக்கும் பகவந்த் கேசரி, ரவிதேஜாவின் டைகர் நாகேஷ்வர ராவ் ஆகிய படங்கள் அக்டோபர் 19ம் தேதி வெளியாகின்றன. அதேபோல், தமிழில் மேலும் சில முக்கியமான படங்களும் அதேநாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், லியோவின் வசூல் பாதிக்கும் என சினிமா ட்ராக்கர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் விஜய்யின் லியோ படத்தில் இயக்குநர் கெளதம் மேனனும் நடித்துள்ளார். இதனால், அவர் இயக்கிய துருவ நட்சத்திரம் லியோவுக்குப் போட்டியாக ரிலீஸ் ஆகாது என விஜய் ரசிகர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர். மேலும் இது வதந்தி தான் எனவும் அவர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X