Dhruva Natchathiram: துருவ நட்சத்திரம் ரிலீஸ் தேதி... சியான் ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட் மிஸ்ஸிங்!
சென்னை: கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளாக ரிலீஸாக முடியாமல் முடங்கி கிடந்த துருவ நட்சத்திரம், தற்போது பிரச்சினைகளை கடந்து வெளியாகவுள்ளது.
இந்தப் படம் கடந்த ஜூன் மாதமோ அல்லது தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாகும் என தகவல்கள் தெரிவித்தன.

ஆனால், துருவ நட்சத்திரம் திரைப்படம் தற்போது தீபாவளி போட்டியில் இருந்து பின்வாங்கியுள்ளது.
துருவ நட்சத்திரம் ரிலீஸ் தேதி கன்ஃபார்ம்: சீயான் விக்ரம் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கிய திரைப்படம் துருவ நட்சத்திரம். கடந்த 2016ம் ஆண்டு தொடங்கிய இந்தப் படத்தின் ஷூட்டிங், பட்ஜெட் பிரச்சினை காரணமாக பாதியிலேயே முடங்கியது. அதன்பின்னர் மீண்டும் தொடங்கிய துருவ நட்சத்திரம், 2021ம் ஆண்டில் முடிவுக்கு வந்ததாக படக்குழு தெரிவித்தது. இருப்பினும் ரிலீஸ் ஆவதில் தொடர்ந்து சிக்கல்கள் இருந்தன.
7 ஆண்டுகளாக பிரச்சினையில் இருந்த துருவ நட்சத்திரம், தற்போது ஒருவழியாக ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் செய்துள்ளது. முன்னதாக இந்தப் படம் ஜூலை மாதமே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மீண்டும் சில சிக்கல்கள் காரணமாக அப்போது ரிலீஸாகவில்லை. இதனையடுத்து தீபாவளி ஸ்பெஷலாக துருவ நட்சத்திரம் வெளியாகும் என சொல்லப்பட்டது. ரசிகர்களும் அதே எதிர்பார்ப்பில் காத்திருந்தனர்.

ஆனால், துருவ நட்சத்திரம் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, இந்தப் படம் நவம்பர் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தீபாவளி வெளியீட்டில் சிவகார்த்திகேயனின் அயலான், கார்த்தியின் ஜப்பான் படங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன. இதனால் நவம்பர் 24ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விக்ரம் - கெளதம் மேனன் காம்போவை முதன்முறையாக பெரிய திரையில் பார்க்க ரசிகர்களும் ஆர்வமாக உள்ளனர்.
கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் உடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, சிம்ரன், பார்த்திபன், ராதிகா சரத்குமார், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஆக்ஷன் ஜானரில் ஸ்பை திரில்லர் படமாக உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அதேபோல், விக்ரமிற்கும் இந்தப் படம் கம்பேக்காக இருக்கும் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

அதேபோல், துருவ நட்சத்திரம் ஹிட் அடித்தால், கெளதம் மேனன் மீண்டும் படம் இயக்குவதில் ஆர்வம் காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீப காலங்களாக நடிப்பதில் பிஸியாக இருக்கும் கெளதம் மேனன், துருவ நட்சத்திரம் ரிலீஸுக்காக காத்திருந்தார். இப்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதால், கெளதம் மேனன் ரசிகர்களும் உற்சாகமாகிவிட்டனர்.


Click it and Unblock the Notifications











