Dhruva Natchathiram: பஞ்சாயத்து ஓவர்... துருவ நட்சத்திரம் புதிய ரிலீஸ் தேதி கன்ஃபார்ம்!!

சென்னை: சியான் விக்ரம் - கெளதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம்.

கடந்த வாரம் வெளியாகவிருந்த இந்தப் படம், கடைசி நேரத்தில் ரிலீஸில் இருந்து பின்வாங்கியது.

Dhruva Natchathiram: Vikrams Dhruva Natchathiram will be released on the 30th

ஃபைனான்ஸ் பிரச்சினை காரணமாக துருவ நட்சத்திரம் ரிலீஸ் தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்தப் படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

துருவ நட்சத்திரம் புதிய ரிலீஸ் தேதி
விக்ரம் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கியுள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். சியான் விக்ரம் - கெளதம் மேனன் கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ள இந்தப் படம், 2016ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால், பட்ஜெட் பிரச்சினை, கொரோனா ஊரடங்கு போன்றவற்றால் ரிலீஸாவதில் அடுத்தடுத்து சிக்கல்கள் எழுந்தன.

துருவ நட்சத்திரத்தை எப்படியாவது ரிலீஸ் செய்துவிட வேண்டும் என நினைத்த கெளதம் மேனன், இப்படத்தின் ஃபைனான்ஸ் பிரச்சினையை தீர்ப்பதற்காகவே நடிப்பில் கவனம் செலுத்தினார். இதனையடுத்து ஒருவழியாக துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்தார் கெளதம் மேனன், அதன்படி, இந்தப் படம் நவம்பர் 24ம் தேதி வெளியாகவிருந்தது.

இதனையடுத்து துருவ நட்சத்திரம் ட்ரெய்லரை வெளியிட்ட படக்குழு, ப்ரொமோஷனையும் செய்து வந்தது. ஆனால், வழக்கம் போல கடைசி நேரத்தில் ரிலீஸில் பிரச்சினையை சந்தித்தது துருவ நட்சத்திரம். அதாவது சிம்புவை ஹீரோவாக நடிக்க வைத்து 'சூப்பர் ஸ்டார்’ என்ற படத்தை இயக்கவிருந்தார் கெளதம் மேனன். இந்தப் படத்துக்காக ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் கெளதம் மேனன் 2.40 கோடி ரூபாய் பணம் வாங்கியுள்ளார்.

ஆனால், 'சூப்பர் ஸ்டார்’ என்ற படத்தை முடிக்காத கெளதம் மேனன், பணத்தையும் தயாரிப்பு நிறுவனத்துக்கு திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால், தங்களுக்கு தர வேண்டிய பணத்தை கொடுக்காமல், துருவ நட்சத்திரம் ரிலீஸாகக் கூடாது என, தடை கோரி மனு தாக்கல் செய்திருந்தது ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம். இந்த வழக்கில் கெளதம் மேனன் பணம் கொடுப்பதாக உறுதி கொடுத்துள்ளார்.

வரும் திங்கள் அல்லது புதன் கிழமைக்குள் இந்தப் பணம் கொடுக்கப்படும் என கெளதம் மேனன் கூறியிருந்தார். இதனையடுத்து துருவ நட்சத்திரம் படத்தை வரும் 30ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாம். இந்த முறை கண்டிப்பாக துருவ நட்சத்திரம் ரிலீஸாகிவிடும் என சொல்லப்படுகிறது. இந்தப் படத்துடன் நயனின் அன்னபூரனி, பார்க்கிங், நாடு, அனிமல் உள்ளிட்ட படங்கள் இந்த வாரம் வெளியாகவுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X