'சிரஞ்சீவி சார்ஜாவின் ஆசிர்வாதம்' கொரோனா தொற்றில் இருந்து மீண்ட துருவா.. நடிகர் அர்ஜுனுக்கு நன்றி!
பெங்களுரூ: சிரஞ்சீவி சார்ஜாவின் ஆசிர்வாதத்தால் கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டோம் என்று அவர் தம்பி துருவா சார்ஜா தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகர் அர்ஜுனின் மருமகனும் கன்னட ஹீரோவுமான சிரஞ்சீவி சார்ஜா, மாரடைப்பால் கடந்த சில மாதங்களுக்கு முன் மரணமடைந்தார்.
கொரோனா லாக்டவுன் நேரத்தில் நிகழ்ந்த அவரது திடீர் மரணம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திடீரென நெஞ்சுவலி
திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் மாரடைப்பால் உயிரிழந்தார். லாக்டவுனுக்குப் பிறகு படப்பிடிப்புக்குச் செல்ல தயாராகி வந்த நிலையில், இப்படி நடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது உடல் பெங்களூரு கனகாபுரத்தில் உள்ள பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

துருவா சார்ஜா
அவர் மனைவி மேக்னா ராஜ் பிரபல நடிகை ஆவார். அவர் இப்போது கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் சிரஞ்சீவி சார்ஜாவின் தம்பி துருவா சார்ஜாவும் கன்னடப் படங்களில் நடித்து வருகிறார். 'அதூரி' என்ற படம் மூலம் அறிமுகமான அவர், பிறகு சில படங்களில் நடித்தார். இப்போது பொகுரு என்ற படத்தில் நடித்துள்ளார். இதன் பணிகள் முடிந்து ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது.

கொரோனா தொற்று
இதனிடையே தற்போது துருவா சர்ஜா மற்றும் அவரது மனைவி பிரேரனா இருவருக்கும் கடந்த 15 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. 'எனக்கும் என் மனைவிக்கும் லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோம். நலமாகத் திரும்புவோம். எங்களுடன் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.

பரிசோதனை
இது பரபரப்பானது. அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த, அர்ஜூன் மகள் நடிகை ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் துருவா சார்ஜா, இப்போது நடத்தப்பட்ட பரிசோதனையில், தனக்கும் தன் மனைவி பிரேரனாவுக்கும் நெகட்டிவ் என்று வந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சிரஞ்சீவி சார்ஜா
இதுபற்றி அவர், 'எங்களுக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி. என் அண்ணன் சிரஞ்சீவி சார்ஜாவின் ஆசிர்வாதத்தால் குணமாகி இருக்கிறோம். எப்போதும் எங்களுடன் இருக்கும் எங்கள் மாமா அர்ஜூனுக்கு நன்றி. மருத்துவர்கள் சுர்ஜித் பால் சிங், மருத்துவ உதவி செய்த ராஜ்குமார் ஆகியோருக்கும் நன்றி என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











