நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் திடீர் மரணத்தால் பாதிக்கப்பட்ட படங்கள்.. அதிரடி முடிவெடுத்த தம்பி!

By

சென்னை: நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மறைந்துவிட்டதால் அவர் நடித்த படங்களுக்கு உதவ, அவர் தம்பி முடிவு செய்துள்ளார்.

Recommended Video

Chiranjeeve Sarja வின் உயிரான ஆசை | Meghana Raj Baby Bump

பிரபல நடிகர் அர்ஜுனின் மருமகனும் கன்னட ஹீரோவுமான சிரஞ்சீவி சார்ஜா, மாரடைப்பால் கடந்த சில நாட்களுக்கு முன் மரணமடைந்தார்.

அவரது திடீர் மரணம், கன்னட சினிமா மட்டுமின்றி, இந்தியா முழுவதும் சோகத்தில் ஆழ்த்தியது.

திடீரென நெஞ்சுவலி

திடீரென நெஞ்சுவலி

இவர், வாயுபுத் ரா என்ற கன்னட படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர். அடுத்து கண்டேதே, சிர்ரு, தடம் தசகுணம், கெம்பே கவுடா, பையா ரீமேக்கான அஜித் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். நான்கு படங்களில் நடித்து வந்தார். லாக்டவுனுக்குப் பிறகு அந்தப் படங்களின் ஷூட்டிங் தொடர இருந்தது. இந்நிலையில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை பலனின்றி

சிகிச்சை பலனின்றி

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். இந்த திடீர் மரணம் அவரது குடும்பத்தினரை மட்டுமின்றி ரசிகர்களையும் அதிர வைத்தது. லாக்டவுனுக்குப் பிறகு படப்பிடிப்புக்குச் செல்ல அவர் தயாராகி வந்த நிலையில் இப்படி நடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது உடல் பெங்களூரு கனகாபுரத்தில் உள்ள பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

மேக்னா ராஜ்

மேக்னா ராஜ்

மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மறைந்த அதிர்ச்சியில் இருந்து மனைவி மேக்னா ராஜ் உட்பட குடும்பத்தினர் இன்னும் மீளவில்லை. மேக்னாவும் அவரும் 10 வருடங்களாகக் காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இப்போது கர்ப்பமாக இருக்கும் மேக்னா, தனது குழந்தையின் மூலம் அவரை மீண்டும் பூமிக்கு கொண்டு வர இருப்பதாகக் கடந்த சில நாட்களுக்கு முன் உருக்கமாகக் கூறியிருந்தார்.

ராஜமார்த்தாண்டா

ராஜமார்த்தாண்டா

இந்நிலையில், சிரஞ்சீவி சார்ஜா நடித்த 'ராஜமார்த்தாண்டா' என்ற படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ராம் நாராயண் இயக்கியுள்ள இந்தப் படத்தில், மறைந்த சிரஞ்சீவி சார்ஜாவுக்கு யார் டப்பிங் பேசுவது என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் அவர் தம்பி, துருவா சார்ஜா பேச முன் வந்துள்ளார்.

துருவா சார்ஜா

துருவா சார்ஜா

இதேபோல, சிரஞ்சீவி சார்ஜா நடித்துள்ள ரணம் என்ற படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளும் இப்போது தொடங்கியுள்ளன. இந்தப் படத்துக்கும் துருவா சார்ஜா டப்பிங் பேசுவதாகக் கூறியுள்ளார். மறைந்த அவர் சகோதரர் நடித்துள்ள மற்ற படங்களுக்கும் தன்னாலான உதவிகளை அவர் செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X