ப்பா.. இன்னாம்மா ஹேண்ட்ஸமா இருக்காரு.. வைரலாகும் துருவ் விக்ரமின் அசத்தலான புகைப்படங்கள்!

சென்னை: நடிகர் துருவ் விக்ரமின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

சியான் விக்ரம் மற்றும் ஆதித்யா வர்மா ரசிகர்கள் #DhruvVikram ஹாஷ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்து அதகளப்படுத்துகின்றனர்.

அப்பாவும் மகனும் வெறித்தனமா வொர்க்கவுட் செய்து உடம்பை ஏற்றி வைத்துள்ள புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.

சூப்பர் கூல் துருவ்

சூப்பர் கூல் துருவ்

அப்படியே ஐபிஎல் போட்டிக்கு பயிற்சி செய்யும் கிரிக்கெட் வீரர் போல, நீல நிற பனியன் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு துருவ் விக்ரம் கொடுத்துள்ள ஹாட் போஸ் புகைப்படம் வேற லெவலில் வைரலாகி வருகிறது. அவரது ரசிகர்கள் ஹாஷ்டேக் எல்லாம் போட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ஒரே ஒரு படம்

ஒரே ஒரு படம்

பாலா இயக்கத்தில் உருவான வர்மா படம் டிராப் செய்யப்பட்டு, கிரிசாயா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ஆதித்யா வர்மா படத்தின் மூலம் நாயகனாக கோலிவுட்டில் என்ட்ரியானார் விக்ரம் மகன். தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கில், தனது அசத்தலான நடிப்பை வெளிக்காட்டி மிரட்டி இருந்தார்.

அப்பாவுடன்

அப்பாவுடன்

அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அப்பா விக்ரம் உடன் இணைந்து சியான் 60 படத்தில் துருவ் விக்ரம் நடிக்கப் போவதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அந்த படத்திற்காக கடுமையான உடற்பயிற்சி செய்து அப்பாவும், மகனும் வெறித்தன லுக்கிற்கு மாறிய போட்டோக்கள் சமீபத்தில் வெளியாகி கோலிவுட் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தின.

ஆன் ஸ்க்ரீன், ஆஃப் ஸ்க்ரீன்

ஆன் ஸ்க்ரீன், ஆஃப் ஸ்க்ரீன்

ஆதித்யா வர்மா படத்தின் காட்சியையும், துருவ் விக்ரம் வொர்க்கவுட் செய்யும் புகைப்படத்தையும் பதிவிட்டு, ஆன் ஸ்க்ரீனிலும், ஆஃப் ஸ்க்ரீனிலும் செம மாஸாக இருக்கிறார் துருவ் விக்ரம் என அவரது ரசிகர்கள் கம்பேர் செய்து கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர்.

வாத்தி ரெய்டு

வாத்தி ரெய்டு

வாத்தி ரெய்டு பாடலை போட்டு வேற லெவலில் வெறித்தனமாக வொர்க்கவுட் செய்யும் துருவ் விக்ரமின் வீடியோக்களையும் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். அவரது இந்த கட்டுமஸ்த்தான உடற்கட்டுக்கான ரகசியமும் இது தான் என்று ரசிகர்கள் வாய் பிளந்து பார்த்து வருகின்றனர்.

ஷூட்டிங் ஆரம்பம் எப்போ

ஷூட்டிங் ஆரம்பம் எப்போ

சியான் விக்ரமின் கோப்ரா, பொன்னியின் செல்வன், துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களின் ஷூட்டிங் எப்போ ஆரம்பம் ஆகும் என்றும், சியான் 60 படத்தை பார்க்க வேண்டும் என்கிற ஆவலுடன் இருப்பதாகவும் ரசிகர்கள் தொடர்ந்து ஏகப்பட்ட ட்வீட்களை பதிவிட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர். விரைவில் பொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங் தொடங்குவதற்கான அனுமதிகள் கோரப்பட்டுள்ளன. காத்திருப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X