Dhurandhar 2 Box Office: 14வது நாளிலும் 20 கோடி வசூலா?.. துரந்தர் 2 இதுவரை மொத்த வசூல் எத்தனை கோடி?

சென்னை: தமிழ் சினிமாவில் புதிய படங்கள் வெளியாகும் முதல் நாளிலேயே 20 கோடி வசூல் செய்ய வேண்டும் என்றால் அது முன்னணி நடிகர்கள் நடித்த படங்களாக மட்டுமே இருக்க முடியும். ஆனால், பாலிவுட்டில் ரன்வீர் சிங் நடித்து வெளியான துரந்தர் 2 திரைப்படம் முதல் நாளில் 200 கோடி வசூல் செய்த நிலையில், 14வது நாளான நேற்றும் அதிகபட்சமாக 20 கோடி ரூபாய் வசூலை இந்தியாவில் மட்டுமே ஈட்டியுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஒட்டுமொத்த இந்தி சினிமா பிரபலங்களும் எப்படி பிரபாஸின் பாகுபலி படம் வந்த போது வாயடைத்து இருந்தார்களோ அதே அளவுக்கு துரந்தர் 2 வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையிலும், வாய் பேச முடியாமல் மெளனியாக மாறிவிட்டனர்.

Dhurandhar 2 Day 14 Box Office Collections are huge compared to Kollywood Biggies
Photo Credit:

மோடிக்கு ஆதரவான பக்கா பாஜக பிரச்சார படம் என கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும் துரந்தர் 2 திரைப்படம் பாலிவுட் ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் கவர்ந்து வசூலில் சக்கைப் போடு போட்டு வருகிறது.

துரந்தர் 2 - 14வது நாள் வசூல்: ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், சாரா அர்ஜுன், ஜமீல் ஜமால், அர்ஜுன் ராம்பால் உள்ளிட்ட பலர் நடித்த துரந்தர் 2 திரைப்படம் 14வது நாளான நேற்று இந்தியாவில் மட்டும் 17906 ஷோக்கள் ஓடி ஒட்டுமொத்தமாக 20.10 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. இந்தியாவில் மட்டும் இதுவரை துரந்தர் 2 திரைப்படம் 1000 கோடி கிராஸ் கலெக்‌ஷனையும் 920 கோடி நெட் கலெக்‌ஷனையும் ஈட்டியுள்ளதாக சாக்னிக் தெரிவித்துள்ளது.

உலகளவில் 1500 கோடி வசூல்: துரந்தர் 2 திரைப்படத்தின் வசூல் வேகம் குறையும் என பார்த்தால் விடுமுறை நாட்கள் வார நாட்கள் நடுவே வரும் நிலையில், அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதுவரை உலகளவில் 1,466.47 கோடி ரூபாய் வசூல் வேட்டை நடத்தியுள்ளதாகவும் விரைவில் 1500 கோடி வசூலை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 14வது நாளான நேற்று ஓவர்சீஸில் மட்டும் 7 கோடி ரூபாய் வசூல் அள்ளியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் இந்த படம் இத்தனைக்கும் வெளியிட தடைவிதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அங்கேயும் வெளியாகி இருந்தால் இந்நேரம் 1600 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியிருக்கும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X