துரந்தர் 2 படத்தை பாராட்டிய ரஜினிக்கு இயக்குநர் நன்றி!
சென்னை: ரன்வீர் சிங் நடித்து தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் துரந்தர் 2 திரைப்படத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஒவ்வொரு இந்தியரும் பார்த்து பெருமை பட வேண்டும் வெகுவாக பாராட்டி இருந்தார். இதற்கு படத்தின் இயக்குநர் நன்றி தெரிவித்துள்ளார்.
ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் துரந்தர் படத்தின் முதல்பாகம் கடந்த ஆண்டு வெளியாகி பேசப்பட்டு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று உலகளவில் 1300 வரை வசூலித்தது. இதையடுத்து துரந்தர் 2 மார்ச் 19ந் தேதி வெளியாகி படம் 5 நாட்களில் 700 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. 1500 கோடி வசூலை இப்படம் நிச்சயம் எளிதாக தொட்டுவிடும் என சினிமா ஆர்வலர்கள் கூறி வருகிறார்கள்.

துரந்தர் 2: முதல் பாகத்தைக் காட்டிலும் இந்த பாகத்தில் பல காட்சிகள் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. மேலும் இந்த படத்தில் பாஜக தலைவர் பிரதமர் நரேந்திர மோதியை பற்றிய மிகைப்படுத்தி வகையில் காட்சிகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல், துரந்தர் 2 படத்தில் அரசியல் தொடர்பாக ஒரு சார்பாக சில வசனங்கள் இடம் பெற்றுள்ளன. இதனால், துரந்தர் 2 படம் தமிழகத்தில் தொடர்ந்து திரையிடப்பட்டு வந்தால் அது அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே இந்த திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், துரந்தர் 2 திரைப்படத்தை தேர்தலுக்குப்பின் தமிழகத்தில் திரையிடலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசரமாக முறையிடப்பட்டுள்ளது.
ரஜினிக்கு நன்றி: இந்நிலையில், ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் ரஜினி துரந்தர் படத்தை ஓவ்வொரு இந்தியருன் பார்க்க வேண்டும். ஆதித்யா தார் பாக்ஸ் ஆபிஸின் மன்னன் . ஜெய் ஹிந்த் " என கூறியிருந்தார். இதற்கு நன்றி தெரிவித்துள்ள இயக்குநர் ஆதித்யா தார், நாங்கள் அனைவரும் 'பொழுதுபோக்கு' என்பதை ஒரே ஒரு அளவுகோலைக் கொண்டு வளர்ந்தவர்கள். பல்லாண்டுகளாக எங்களை விசில் அடிக்கவும், சிரிக்கவும், அழவும் வைத்து, வாழ்வையே பெரிதாக உணர வைத்தவர் நீங்கள் தான். இன்றும் அதே கம்பீரத்துடனும் நேர்த்தியுடனும் அதைச் செய்வது, அது ஒரு தூய மாயாஜாலம். 'துரந்தர் 2' படத்தை 'கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என்று நீங்கள் சொல்வது, என் வாழ்க்கையின் மிகப்பெரிய 'சூப்பர் ஸ்டார்' தருணம் போல் உணர்கிறேன். எங்கள் அனைவரையும் பெரிய கனவுகளைக் காணக் கற்றுக் கொடுத்த அதே நபரிடமிருந்து கிடைத்த ஒரு ஆசீர்வாதம் போல் இது உணர்கிறேன். வார்த்தைகளால் விவரிக்க முடியாத நன்றி, ஜெய் ஹிந்த் என நன்றி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











