Dhurandhar The Revenge: அடிதூள்.. மார்ச் 18 மாலை 6 மணிக்கே துரந்தர் 2 ஸ்பெஷல் ப்ரீயர்.. ’யூத்’ பாவம்!
சென்னை: ரன்வீர் சிங், மாதவன், சாரா அர்ஜுன், அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத் நடித்துள்ள துரந்தர் The Revenge திரைப்படம் மார்ச் 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில், Paid Premiere ஷோக்கள் மார்ச் 18ம் தேதி மாலை 6 மணிக்கே ஆரம்பமாகின்றன.
காந்தாரா 2 உள்ளிட்ட படங்கள் முதல் நாள் இரவு 10 மணிக்கு மட்டுமே ஓபன் ஆன நிலையில், மாலை 6 மணிக்கு ஒரு ஷோ, இரவு 10 மணிக்கு ஒரு ஷோ என ஒட்டுமொத்தமாக கல்லா கட்ட ஜியோ ஸ்டூடியோஸ் தயாராகி விட்டது.

மார்ச் 18ம் தேதி படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் ஃபயர் விட்டால் மார்ச் 19ம் தேதி தமிழில் கென் கருணாஸ் நடிப்பில் வெளியாகும் 'யூத்' படத்தின் நிலை அந்தோ பரிதாபம் தான் என்று சினிமா வட்டாரத்தில் பேசத் தொடங்கியுள்ளனர்.
தப்பான ரிலீஸ் தேதி: ஹீரோவாகவும் இயக்குநராகவும் அறிமுகமாகவுள்ள கென் மார்ச் 19ம் தேதி தனது 'யூத்' படத்தை ரிலீஸ் செய்யப் போவதாக எடுத்த முடிவு ரொம்பவே தப்பானது என சினிமா வட்டாரத்தில் பலரும் பேசத் தொடங்கியுள்ளனர். யஷ் நடித்த டாக்ஸிக் திரைப்படமே துரந்தர் 2 ஹீட்டுக்கு முன்பாக நிற்க முடியாது என்பதால் தான் தள்ளிப்போனது. ஆனால், கென் அது தெரியாமல் 'யூத்' படத்தை வெளியிடுகிறார் என்ன ஆகப்போகிறதோ என்கின்றனர். அதே நேரத்தில் கென்னோட தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.

சென்னையில் டிக்கெட் புக்கிங் ஆரம்பம்: மார்ச் 19ம் தேதி வெளியாகும் துரந்தர் 2 திரைப்படத்தின் ஸ்பெஷல் ப்ரீமியர் மார்ச் 18ம் தேதி தொடங்குகிறது. பிவிஆர் உள்ளிட்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் தற்போதே துரந்தர் தி ரெவெஞ்ச் படத்துக்கான டிக்கெட் புக்கிங் சென்னையில் தொடங்கி விட்டது. பல தியேட்டர்களில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தே விட்டன. சில தியேட்டர்களில் 80 சதவீதம் டிக்கெட் புக்கிங் நிறைவடைந்துள்ளன. இந்திய சினிமாவிலேயே இதுவரை இந்த ஆண்டு பெரிதாக பான் இந்திய படங்கள் ஏதும் வராத நிலையில், துரந்தர் 2 திரைப்படத்தைக் காண ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
3 மணி நேரம் 55 நிமிடங்கள்: மாலை 6 மணிக்கு துரந்தர் 2 படத்தை தியேட்டருக்குச் சென்றால் இரவு 10 மணிக்கு மேல் தான் ரசிகர்கள் வெளியே வரமுடியும். ஏ சான்றிதழ் பெற்றுள்ள துரந்தர் 2 திரைப்படத்தின் ரன் டைம் மட்டுமே 3 மணி நேரம் 55 நிமிடங்கள் ஆகும். புஷ்பா 2, அனிமல் படங்களை விட துரந்தர் 2 படத்தின் ரன் டைம் அதிகம் என்றாலும் ரசிகர்கள் காண ரெடியாக உள்ளனர். இரவு 10 மணி காட்சிக்கு செல்பவர்கள் நள்ளிரவு 2 மணிக்குத்தான் படம் முடிந்து வெளியே வரமுடியும்.


Click it and Unblock the Notifications











