துரந்துர் 2 ரிலீஸும் தள்ளிப்போகிறதா?.. மார்ச் 19 அப்போ எந்த பெரிய படமும் வராதா?.. என்னங்க சொல்றீங்க?

மும்பை: யஷ் நடித்துள்ள டாக்ஸிக் திரைப்படம் மார்ச் 19ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் அந்த படம் ஜூன் 4ம் தேதி ரிலீஸ் ஆகும் என படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான நடிகர் யஷ் இன்று அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டார்.

துரந்தர் 2வுக்கு பயந்து தான் யஷ் டாக்ஸிக் படத்தின் ரிலீஸ் தேதியை ஒரேயடியாக மாற்றியமைத்து விட்டார் என பாலிவுட் ரசிகர்கள் ட்ரோல் செய்யத் தொடங்கினர்.

Dhurandhar 2 may get postponed buzz goes viral in social media after Toxic Postponed
Photo Credit:

இந்நிலையில், துரந்தர் 2 படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சில தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால், இன்னமும் படக்குழு இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

துரந்தர் 2 டிரைலர் வெளியாகவில்லை: கடந்த சில தினங்களுக்கு முன்னதாகவே துரந்தர் 2 டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்னமும் ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்‌ஷய் கன்னா, சஞ்சய் தத், சாரா அர்ஜுன், அர்ஜுன் ராம்பால் நடித்த துரந்தர் 2 படத்தின் டிரைலர் மற்றும் படத்தின் புரொமோஷன் எதுவுமே ஆரம்பமாகவில்லை.

துரந்தர் 2 ரிலீஸ் தள்ளிப்போகிறதா?: யஷ்ஷின் டாக்ஸிக் வெளியாகாத நிலையில், ரன்வீர் சிங்கின் துரந்தர் 2 படத்துக்கு மார்ச் 19ம் தேதி ஜாக்பாட் தான் என்றும் அதே தேதியில் படத்தை வெளியிட்டால் பாக்ஸ் ஆபிஸில் இன்னொரு 1000 கோடி உறுதி என்கின்றனர். ஆனால், ஓவர்சீஸ் வசூல் கண்டிப்பாக அடிபடும் என்றும் ஈரானுக்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா போர் தொடுத்துள்ள நிலையில், நிலைமை திடீரென மோசமடைந்தால் வெளிநாடுகளில் ரசிகர்கள் படங்களை கொண்டாடமாட்டார்கள் என படக்குழு ஆலோசித்து வருவதாக கூறுகின்றனர்.

ஜூன் மாதம் கிளாஷ்?: ஒருவேளை டாக்ஸிக் படத்தை போலவே ரன்வீர் சிங்கின் துரந்தர் 2 படமும் தள்ளிப்போனால் இந்த மார்ச் மாதமும் இந்திய திரையரங்குகள் ட்ரை ஆகிவிடும் என்கின்றனர். மேலும், துரந்தர் 2 ரிலீஸ் தேதியையும் ஜூன் 4 என அறிவித்து விட்டால் ஒரே காமெடியாக இருக்கும் என ரன்வீர் சிங் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். விரைவில் படக்குழு சரியான முடிவை எடுத்து அறிவிக்கும் என்கின்றனர். துரந்தர் 2 படத்தின் ரன் டைம் சுமார் 4 மணி நேரம் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X