Official Box Office: அடேங்கப்பா 4 நாளில் 761 கோடியாம்.. துரந்தர் 2வை தூக்கி வைத்துக் கொண்டாடும் மக்கள்!
சென்னை: தமிழ் சினிமாவில் 4 நாட்கள் கென் கருணாஸ் நடித்த யூத் திரைப்படம் 23 கோடி ரூபாய் வசூல் வந்ததையே கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், பாலிவுட்டில் 4 நாட்களில் உலகளவில் அதிகபட்சமாக 761 கோடி ரூபாய் வசூல் வேட்டையை துரந்தர் 2 எடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜியோ ஸ்டூடியோஸ் சற்றுமுன் வெளியிட்டுள்ளது.
பாஜகவின் பிரச்சார படம் என துருவ் ரதி உள்ளிட்ட பலர் துரந்தர் 2 படத்தை கடுமையாக விமர்சித்தாலும் ரன்வீர் சிங்கின் அசுரத்தனமான நடிப்பு மற்றும் மாதவனின் ஆரா படத்தை மக்கள் கொண்டாடும் அளவுக்கு மாற்றி விட்டது.

இந்தியாவில் மட்டுமே மிகப்பெரிய வசூல் வேட்டையை கடந்த 4 நாட்களில் துரந்தர் 2 படம் நடத்தியுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் படத்துக்கான டிமாண்ட் உச்சத்தை தொட்டுள்ளது.
துரந்தர் 2 அதிகாரப்பூர்வ வசூல்: துரந்தர் 2 படத்தின் வசூல் தொடர்பாக பாக்ஸ் ஆபீஸ் டிராக்கர்கள் மட்டுமே 100 கோடி, 200 கோடி என பதிவிட்டு வந்த நிலையில், ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் ஆதித்யா தர் தயாரிப்பு நிறுவனங்கள் அமைதி காத்து வந்தன. இந்நிலையில், சற்றுமுன் 4 நாட்களில் துரந்தர் 2 திரைப்படம் இந்தியாவில் 550 கோடி கிராஸ் வசூல் ஈட்டியுள்ளதாகவும் உலகளவில் ஒட்டுமொத்தமாக 761 கோடி ரூபாய் கிராஸ் வசூல் ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளனர்.
ஒவ்வொரு நாளும் எவ்வளவு வசூல்: துரந்தர் 2 திரைப்படம் முதல் நாளில் இருந்து ஞாயிற்றுக்கிழமையான நேற்று வரை எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்த அறிவிப்பையும் ஒரே போஸ்டரில் தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ளது.
முதல் நாள் வசூல்: முந்தைய நாள் பெயிட் ப்ரிவ்யூவையும் சேர்த்து 145 கோடி வசூல்
2வது நாள் வசூல்: 83 கோடி ரூபாய்
3வது நாள் வசூல்: 117 கோடி ரூபாய்
4வது நாள் வசூல்: 121 கோடி ரூபாய்
என்றும் இந்தியாவில் மட்டும் நெட் வசூல் இதுவரை 466 கோடி ரூபாய் என படக்குழு அறிவித்துள்ளது.
பிரச்சார படம்னு சொன்னாங்க: மோடியின் பணமதிப்பிழப்பை நியாயப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட பாஜகவின் பிரச்சார படம் தான் துரந்தர் 2 என்றும் இந்த படத்தை எந்தவொரு தணிக்கை தடையுமினி தேர்தல் ஆணையமும் வெளியிட அனுமதித்து விட்டதே என கேள்விகள் கிளம்பி உள்ளன. தமிழ்நாட்டில் தற்போது படத்தை நிறுத்த வழக்கும் தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், பாஜக பிரச்சார படம் என சொல்லப்பட்டாலும் மக்கள் துரந்தர் 2 படத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்களே. அப்போ மக்களுக்கு இதுபோன்ற படங்கள் தான் பிடித்திருக்கிறதா? என்றும் தேசப்பற்று விதை நாடு முழுவதும் இந்த படத்தின் மூலம் பற்றி எரிகிறது என்றும் கூறுகின்றனர்.
2000 கோடி தாண்டுமா?: 1000 கோடி ரூபாய் வசூல் எல்லாம் இந்த படத்துக்கு சர்வ சாதாரணம் என்றும் அதிகபட்சமாக 1500 கோடி வரை வசூல் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2000 கோடி வசூல் வரவும் அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. தமிழ் சினிமாவில் இதுபோன்ற படத்தை எல்லாம் எடுக்க வாய்ப்பே இல்லை என்று ஒரு கூட்டமும் கமல் அப்பவே விஸ்வரூபம் எடுத்தார். ஆனால், அதற்கு எதிர்ப்புகள் தான் கிளம்பின என்றும் கூறி வருகின்றனர். இந்த ஆண்டு பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டை நடத்தும் படமாக ஜெயிலர் 2 மட்டுமே இருக்கும் எனக் கூறுகின்றனர். ரிலீஸ் தாமதம் காரணமாக ஜன நாயகன் பெரிதாக வசூல் செய்யாது என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











