Dhurandhar 2 Box Office: துணை முதல்வர் படத்தை பந்தாடிய துரந்தர் 2.. ப்ரீமியர் ஷோவிலேயே வசூல் சாதனை!

ஹைதராபாத்: ஆந்திராவின் துணை முதல்வராக உள்ள பவன் கல்யாண் அரசியலுக்கு வந்த பின்னரும் தான் நடித்த படங்களை தொடர்ந்து ரிலீஸ் செய்து வருகிறார். முன்னதாக அவர் நடிப்பில் வெளியான ஹரி ஹர வீரமல்லு திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த நிலையில், தே கால் ஹிம் ஓஜி திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பியது.

ஆனால், துரந்தர் 2 படத்துக்குப் போட்டியாக வெளியான பவன் கல்யாணின் உஸ்தாத் பகத் சிங் திரைப்படத்துக்கு மோசமான விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில், வசூலில் ரொம்பவே டல் அடித்துள்ளது.

Dhurandhar 2 Special Premiere Box Office beats Pawan Kalyan movie premiere record
Photo Credit:

அல்லு அர்ஜுன், விஜய் தேவரகொண்டா போன்ற டோலிவுட் நடிகர்களே பவன் கல்யாண் படத்தை பார்த்து பாராட்டாமல் துரந்தர் 2 படத்தை முதலில் பார்த்து பாராட்டியுள்ளனர்.

துரந்தர் முதல் நாள் வசூல் காலி: துரந்தர் படத்தின் முதல் நாள் வசூலை துரந்தர் 2 படத்தின் ப்ரீமியர் ஷோ காட்சிகள் மூலமாகவே வீழ்த்தி மிகப்பெரிய சாதனையை துரந்தர் 2 திரைப்படம் பெற்றுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவில் துரந்தர் 2 படத்தின் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட டப்பிங் வெர்ஷன்கள் வெளியாகவில்லை. பல தியேட்டர்களில் இந்தி வெர்ஷன் கூட வெளியாகவில்லை போன்ற சிக்கல்கள் இருந்தாலும், துரந்தர் தி ரிவெஞ்ச் திரைப்படம் ப்ரீமியர் ஷோவில் மட்டும் உலகளவில் 52.71 கோடி ரூபாய் கிராஸ் வசூலை (44 கோடி ரூபாய் நெட்) ஈட்டியுள்ளதாக சாக்னிக் தகவல் வெளியிட்டுள்ளது.

துணை முதல்வர் படத்துக்கு வேட்டு: துரந்தர் 2 படத்துடன் மோதினால் சரியா வராது என நினைத்து டாக்ஸிக் திரைப்படமே தள்ளிப்போய்விட்டது எனக் கூறப்பட்டு வரும் நிலையில், துணை முதல்வர் பவன் கல்யாணின் உஸ்தாத் பகத் சிங் திரைப்படம் போட்டியாக வெளியானது. இந்நிலையில், ப்ரீமியர் ஷோவில் ஓஜி படம் உருவாக்கி வைத்த 25 கோடி ரூபாய் வசூல் சாதனையை கூட துரந்தர் 2 துவம்சம் செய்துள்ளது.

300 கோடி வருமா?: ரன்வீர் சிங்கின் துரந்தர் 2 திரைப்படம் முதல் நாளே 200 கோடி ரூபாய்க்கும் மேல் அதிக வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 முதல் நாள் வசூலை வீழ்த்த வேண்டும் என்றால் சுமார் 300 கோடி வரை ஈட்ட வேண்டும். ஆனால், அதற்கு வாய்ப்பு குறைவு தான் எனக் கூறுகின்றனர். மேலும், துரந்தர் முதல் பாகம் அளவுக்கு 2வது பாகம் சுவாரஸ்யமாக இல்லை என்றும் கூறப்பட்டு வரும் நிலையில், 2000 கோடி வசூலை இந்த படம் ஈட்டுமா என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும். உஸ்தாத் பகத் சிங் ஒட்டுமொத்தமாக 200 கோடி வசூல் செய்தாலே படம் ஹிட் ஆகிவிடும் என்றும் ஆனால், அதற்கு வாய்ப்பு இல்லை என்றும் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X