Dhurandhar 2 x review: மாஸ்டர் பீஸ்.. அதிரடியான கிளைமாக்ஸ்.. துரந்தர் 2 ட்விட்டர் விமர்சனம்!

சென்னை: ரன்வீர் சிங் நடித்த 'துரந்தர்' படம் டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி வெளியாகி நல்ல வசூலை அள்ளியது. உலகம் முழுவதும் மெகா ஹிட்டடித்த இப்படத்தில் ரன்வீர் சிங் முதன்மை கேரக்டரில் நடித்திருக்க, மாதவன், சஞ்சய் தத், அக்சய் கன்னா, அர்ஜுன் ராம்பால் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். துரந்தர் படத்தின் 2 ஆம் பாகம் நாளை பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில், இன்று மாலை ப்ரீமியர் காட்சிகள் வெளியிடப்பட்டன. தற்போது 'துரந்தர் 2' படத்தின் 'எக்ஸ்' விமர்சனத்தை பார்க்கலாம்.

Dhurandhar 2 படம் பார்த்த இணையவாசி ஒருவர் தனது எக்ஸ் தளத்தில், துரந்தர் 2 படம் சினிமாவின் மிகச்சிறந்த படமாகும். பிரம்மாண்டமான காட்சிகள், உணர்ச்சிகள், சண்டைக்காட்சிகள், நடிப்பு மற்றும் தாக்கம் என ஒவ்வொரு தளத்திலும் இப்படம் சிறப்பாக வந்துள்ளது. AdityaDhar-க்கு ஒரு சல்யூட், இந்தப்படம் நிச்சயம் ஒரு பிரம்மாண்டமான வெற்றிப்படமாக அமையும். துரந்தர் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்புகள் இயல்பாகவே வானளாவியிருந்தன... நல்லவேளையாக, Dhurandhar The Revenge அந்தப் பிரம்மாண்டமான எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்தது மட்டுமல்லாமல், முதல் பாகத்தையே மிஞ்சிவிட்டது.

Dhurandhar 2 Twitter Review 2
Photo Credit:

துரந்தர் 2: இயக்குநர் Aditya Dhar இன்னும் பெரிய, கூர்மையான மற்றும் மிகவும் லட்சியம் நிறைந்த ஒரு பார்வையுடன் மீண்டும் களமிறங்கியுள்ளார். முதல் பாகம் கதைக்கு ஒரு அடித்தளத்தை அமைந்துள்ளார். Dhurandhar TheRevenge கதைகளம் முற்றிலும் புதியதொரு உச்சத்திற்கு அழைத்து சென்றது. DhurandharTheRevenge படத்தை உண்மையிலேயே தனித்து நிற்கச் செய்வது அதன் உணர்வுபூர்வமான மையக்கருதான்... துணிச்சல், மன உறுதி, பழிவாங்கல் மற்றும் நீதி ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஒரு வலிமையான கதை உள்ளது.

கிளைமாக்ஸ் காட்சி அட்டசாகம்: படம் பார்த்து வெகுநேரம் கடந்த பிறகும் படத்தின்காட்சிகள் மனதைவிட்டு நீங்காமல் நிற்கின்றன. திரைக்கதைதான் இப்படத்தின் முதுகெலும்பு. மிக நேர்த்தியாக எழுதப்பட்டு, விறுவிறுப்பான வேகத்துடனும், மெய்சிலிர்க்க வைக்கும் தருணங்களுடனும் இது அமைந்துள்ளது... படம் தனது உச்சத்தை எட்டிவிட்டதாக நீங்கள் உணரும் ஒவ்வொரு முறையும், அது தனது தரத்தை இன்னும் ஒரு படி மேலே உயர்த்திக்கொண்டே செல்கிறது. படத்தின் உச்சக்கட்டக் காட்சி (Climax) ஒரு சிறப்புக்குரியது. அது வெடிப்புற அமைந்தும், உணர்வுபூர்வமாகவும், மிகுந்த மனநிறைவை அளிப்பதாகவும் உள்ளது. சொல்லப்போனால், படத்தின் இறுதித் தருணங்கள் உங்களை வாயடைத்துப்போகச் செய்யும். திரையரங்கை விட்டு வெளியேறும்போது இப்படம் அத்தகையதொரு தாக்கத்தை உங்கள் மனதில் ஏற்படுத்தும்.

மாஸ்டர் பீஸ்: சுருக்கமாகச் சொன்னால், முதல் பாகத்தை நீங்கள் ரசித்திருந்தால், இந்த இரண்டாம் பாகத்தை நிச்சயம் கொண்டாடுவீர்கள்... படத்தின் இயக்குநர் ஒரு மந்திரவாதி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். முதல் பாகத்தின் தாக்கத்திற்குச் சற்றும் குறையாத, மாறாக அந்த அனுபவத்தை இன்னும் உயர்ந்த தளத்திற்கு எடுத்து சென்றுள்ளார். படத்தின் அனைத்துக் கதாபாத்திரங்களின் நடிப்பும் மிகச்சிறந்த தரத்தில் அமைந்துள்ளது... ரன்வீர் சிங், மிக கம்பீரமானதொரு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என இணையவாசி ஒருவர் படத்தை வெகுவாக பாராட்டி மொத்தத்தில் படம் மாஸ்டர் பீஸ் என பதிவிட்டு 5/4.5 மதிப்பெண் கொடுத்துள்ளார்.

படம் சூப்பர்: மற்றொரு இணையவாசி 'இதை பார்ப்பேன் என்று நான் நினைக்கவே இல்லை, ஒருபோதும் உசைர் பலூச் கால்பந்து விளையாடுகிறார். மற்றொருவர்' கூட்டத்தில் இருப்பவர்கள் அனைவரும் 'ஹர் ஹர் ஆதித்யா தார்' என முழக்கமிடுகிறார்கள் படம் சூப்பர் என பதிவிட்டுள்ளார்.
'

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X