Box Office: துரந்தர் 2 முதல் ஹாப்பி ராஜ் வரை.. லேட்டஸ்ட் ரிலீஸ் படங்களின் வசூல் விவரம் என்ன?
சென்னை: தாய் கிழவி திரைப்படம் இன்னமும் ஓடிடியில் வெளியாகாமல் பல தியேட்டர்களில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது. துரந்தர் 2 திரைப்படம் 2 வாரங்களாக உலகளவில் பாக்ஸ் ஆபீஸ் டானாக மாறி மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்துள்ளது.
கென் கருணாஸின் யூத், ஜி.வி. பிரகாஷ் குமாரின் ஹாப்பி ராஜ் என வரிசையாக தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களும் நல்ல வசூலை ஈட்டி வெற்றிநடை போட்டு வருகின்றன.

இந்த வாரம் லெஜண்ட் சரவணா நடித்துள்ள லீடர், ஈழப்போரை மையமாக வைத்து உருவாகியுள்ள நீளிரா, சமுத்திரகனி, கெளதம் மேனன் நடித்துள்ள கார்மேனி செல்வம், பரத் நடித்துள்ள காளிதாஸ் 2, சர்வானந்தின் பைக்கர் உள்ளிட்ட பல படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன. இந்நிலையில், ஏற்கனவே வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படங்களின் பாக்ஸ் ஆபீஸ் குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம் வாங்க..
துரந்தர் 2 பட 15 நாள் வசூல்: ஆதித்யா தர் தயாரித்து இயக்கிய துரந்தர் 2 திரைப்படம் 15வது நாளில் 17.80 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. இதுவரை உலகளவில் இந்த திரைப்படம் 1,492.17 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. புனித வெள்ளி நாளான இன்று மீண்டும் விடுமுறை என்பதால் 1500 கோடி வசூலை கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யூத் வசூல்: கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள யூத் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக அனிஷ்மா, மீனாட்சி உள்ளிட்ட நடிகைகள் நடித்துள்ளனர். சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி அப்பா, அம்மாவாக நடித்து எமோஷனலாக கிளைமேக்ஸ் வைத்து முடித்த நிலையில், 50 கோடி வசூலை அசால்ட்டாக அந்த படம் தாண்டியது. துரந்தர் 2 படத்துடன் வெளியான யூத் திரைப்படம் இதுவரை உலகளவில் சுமார் 60 கோடியை நெருங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஹாப்பி ராஜ் வசூல்: ஜி.வி. பிரகாஷ் குமார், ஸ்ரீகெளரி ப்ரியா, அப்பாஸ், ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஹாப்பி ராஜ் திரைப்படம் இதுவரை 7 நாட்களில் இந்தியளவில் அதிகபட்சமாக 4.9 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகளவில் சுமார் 7 கோடி வரை இந்த படம் வசூல் அள்ளியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வாரமும் ஹாப்பி ராஜ் புதிய படங்களுடன் போட்டிப் போடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வாரம் வெளியாகவுள்ள பிரதீப் ரங்கநாதனின் LIK திரைப்படம் தமிழ் சினிமாவுக்கு 100 கோடி வசூல் படமாக மாறுமா என்கிற எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











