கூலி வசூலை முந்திய துரந்தர்.. 500 கோடி கிளப்பில் ரன்வீர் சிங் படம்.. காந்தாரா வசூலை முந்துமா?
மும்பை: இந்த 2025ம் ஆண்டு பாலிவுட், கோலிவுட் மற்றும் கன்னட திரையுலகம் தான் 500 கோடி பாக்ஸ் ஆபீஸ் படங்களை கொடுத்துள்ளன. டோலிவுட்டில் டாப் நடிகர்கள் படங்கள் எதுவுமே பெரிதாக வசூல் ஈட்டவில்லை. மலையாள திரையுலகில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்த லோகா: சாப்டர் 1 சந்திரா திரைப்படம் அதிகபட்சமாக 300 கோடி வசூலை ஈட்டியது.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் 500 கோடி வசூலை ஈட்டி இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களிலேயே அதிக வசூல் ஈட்டிய படமாக மாறியுள்ளது. தென்னிந்தியாவில் 2வது இடத்தையும் கூலி பிடித்துள்ளது.

பாலிவுட்டில் இந்த ஆண்டு வெளியான படங்களில் விக்கி கெளஷல், ராஷ்மிகா மந்தனா நடித்த சாவா திரைப்படம் 800 கோடி வசூலை ஈட்டியது. அந்த படத்தைத் தொடர்ந்து சையாரா திரைப்படம் 575 கோடி வசூலை ஈட்டியது. இந்நிலையில், 3வது 500 கோடி படமாக துரந்தர் திரைப்படம் மாறியுள்ளது.
எதிர்ப்புகளுக்கு மத்தியில் எகிறும் வசூல்: பாகிஸ்தானுக்கும் இஸ்லாமிய மதத்துக்கும் எதிரான பிரச்சார படம் தான் துரந்தர் என ஒரு பக்கம் அந்த படத்துக்கு எதிராக துருவ் ரதி உள்ளிட்டோர் போராட்டம் செய்து வருகின்றனர். துரந்தர் படத்துக்கு எதிராக துருவ் ரதி வீடியோ வெளியிட்ட நிலையில், முதல் நாள் வசூலை விட கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக 44 கோடி வரை உலகளவில் வசூல் ஈட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் படம் வெளியான முதல் நாளே 28 கோடி தான் வசூல் செய்தது. ஆனால், நேற்று அதிகபட்சமாக 38.25 கோடி வசூல் செய்துள்ளதாக சாக்னிக் தகவல் தெரிவித்துள்ளது.

550 கோடி வசூல்: ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், அக்ஷய் கன்னா, மாதவன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான துரந்தர் திரைப்படம் இந்தியாவில் இதுவரை 556.33 கோடி வசூலை ஈட்டியுள்ளது. உலகளவில் 800 கோடி வசூலை படம் கடந்துள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஜினிகாந்தின் கூலி படத்தின் உலக வசூலை எல்லாம் அசால்ட்டாக பின்னுக்குத்தள்ளி விட்டது வெறும் இந்தியில் மட்டுமே வெளியான துரந்தர்.
காந்தாராவை முந்திவிடும்: காந்தாரா லெஜண்ட் சாப்டர் 1 திரைப்படம் உலகளவில் 844 கோடி வசூலை ஈட்டிய நிலையில், துரந்தர் திரைப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறையுடன் காந்தாரா சாப்டர் 1 வசூலை முந்தி 1000 கோடி வரை வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலிவுட்டில் சாவ்வா திரைப்படம் 800 கோடி வசூல் செய்த நிலையில், அதனை துரந்தர் முறியடித்து விட்டது.


Click it and Unblock the Notifications











