Dhurandhar 2 Box Office: 32வது நாளிலும் இத்தனை கோடி?.. துரந்தர் 2 மொத்த வசூல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
மும்பை: ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், மாதவன், சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால் உள்ளிட்ட பலர் நடித்த துரந்தர் தி ரிவெஞ்ச் திரைப்படம் கடந்த மார்ச் 19ம் தேதி வெளியானது. இதுவரை 32 நாட்களில் துரந்தர் 2ம் பாகம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சற்றுமுன் ஜியோ ஸ்டூடியோஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
புஷ்பா 2 படத்தின் வசூலை துரந்தர் 2 கிட்டத்தட்ட நெருங்கிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். விரைவில் ஓடிடியில் துரந்தர் 2 வெளியாகவுள்ள நிலையில், 32வது நாளிலும் அதிகபட்சமாக 5.5 கோடி வசூலை துரந்தர் தி ரிவெஞ்ச் திரைப்படம் அள்ளியுள்ளது.

தமிழ் சினிமாவில் வெளியான புதிய படங்களே முதல் நாளில் கூட 1 கோடி வசூலை வசூல் செய்ய சிரமப்பட்டு வரும் நிலையில், துரந்தர் 2 எல்லாம் பாக்ஸ் ஆபீஸில் பக்கா மாஸ் காட்டி வருகிறது.
துரந்தர் 2 மொத்த வசூல்: 1783 கோடி ரூபாய் வசூலை உலகம் முழுவதும் இதுவரை துரந்தர் 2 திரைப்படம் அள்ளியிருப்பதாக ஜியோ ஸ்டூடியோஸ் நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவில் துரந்தர் 2 திரைப்படம் அதிகபட்சமாக 1360 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. ஓவர்சீஸில் 423 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளனர்.
பாலிவுட்டில் மெகா பிளாக்பஸ்டர்: இதுவரை வெளியான எந்தவொரு இந்தி சினிமாவும் இந்தியாவில் 1000 கோடி வசூலை ஈட்டியது கிடையாது. 2000 கோடி வசூலை ஈட்டிய அமீர்கானின் தங்கல் திரைப்படமும் அதிக வசூலை சீனாவில் தான் ஈட்டியது. ரன்வீர் சிங் செட் செய்துள்ள இந்த சாதனை இந்த ஆண்டு இறுதியில் வெளியாகவுள்ள ஷாருக்கானின் கிங் படம் முறியடிப்பது கடினம் என்கின்றனர். ஆனால், ரன்பீர் கபூரின் ராமாயணம் முறியடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனர்.
தீபிகா படுகோன் கர்ப்பம்: துரந்தர் 2 படத்தின் வெற்றி சந்தோஷத்தில் தீபிகா படுகோனை 2வது முறையாக ரன்வீர் சிங் கர்ப்பமாக்கி விட்டாரா என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். கல்கி 2 மற்றும் ஸ்பிரிட் உள்ளிட்ட படங்களில் இருந்து வெளியேறிய தீபிகா படுகோன் அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்து வருகிறார். ஆனால், தொடர்ந்து அவர் கர்ப்பமாக இருப்பதால் படப்பிடிப்பு தாமதமாகுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications