Dhurandhar 2: கடைசி நேரத்தில் இப்படி ஆகிடுச்சே.. துரந்தர் 2 ப்ரீமியர் ஷோ கேன்சல்.. நொந்துப்போன ஃபேன்ஸ்
சென்னை: ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால், சாரா அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள துரந்தர் 2 திரைப்படம் இந்தியாவில் இன்று தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் மாலை 5 மணிக்கு மேல் ஸ்பெஷல் ப்ரீமியர் ஷோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது துரந்தர் 2 திரைப்படத்தின் ப்ரீமியர் ஷோக்கள் கேன்சல் செய்யப்பட்டுள்ளன.
துரந்தர் திரைப்படம் கடந்த ஆண்டு இந்தி மொழியில் மட்டுமே வெளியானது. அப்படி இருந்தும் படம் 1000 கோடி பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கியது. துரந்தர் 2 படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஜியோ ஸ்டூடியோஸ் இன்று உலகம் முழுவதும் பெய்டு ப்ரீமியர் ஷோ போட்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தது.

இந்நிலையில், தற்போது படத்தின் 2ம் பாக கன்டென்ட் வந்து சேரவில்லை என்றும் கடைசி நேரத்தில் சில தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டுள்ளதே இந்த தாமதத்திற்கு காரணம் என்கின்றனர்.
துரந்தர் 2 ப்ரீமியர் ஷோ கேன்சல்: உலகம் முழுவதும் துரந்தர் 2 திரைப்படத்தின் ஸ்பெஷல் ப்ரீமியர் ஷோக்கள் இன்று மாலை 5 மணிக்கு பல தியேட்டர்களில் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், 10 மணி காட்சியும் திரையிடப்படும் என அறிவித்த நிலையில், டிக்கெட் முன்பதிவிலேயே 43 கோடி ரூபாய் வசூல் வந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. இந்நிலையில், துரந்தர் 2 ஸ்பெஷல் ப்ரீமியர் ஷோக்கள் நிறுத்தப்படுவதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பிவிஆர் உள்ளிட்ட மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்து டிக்கெட் ரீஃபண்ட் செய்யவும் முடிவு செய்துள்ளன.
கன்டென்ட் டிலே: துரந்தர் 2 படத்தின் இந்தி வெர்ஷன் எந்தவொரு பிரச்னையுமின்றி இன்று மாலை வெளியாகும் என்றும் ஆனால், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மற்ற பான் இந்திய மொழிகளுக்கான கன்டென்ட் இன்னும் சரியாக வந்து சேரவில்லை என்றும் அதன் காரணமாக திட்டமிட்டப்படி படம் இன்று மாலை வெளியாகாது என்றும் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் டிக்கெட் புக் செய்தவர்களுக்கான பணத்தை திருப்பித் தர முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை பெரும் அப்செட் ஆக்கியுள்ளன.
நாளையும் டவுட்டு தான்: மேலும், துரந்தர் 2ம் பாகத்தை ரசிகர்கள் இந்தியில் பார்க்க வேண்டிய கட்டாயத்துக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளனர். தமிழ் மொழியில் நாளை மார்ச் 19ம் தேதி கூட துரந்தர் 2 வெளியாகுமா என்பது டவுட்டு தான் என தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











