நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கும் விக்ரம் படம்.. வெளியான அசத்தல் அப்டேட்!

சென்னை: விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படம் குறித்த அசத்தல் அப்டேட் வெளியாகியுள்ளது.

கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் துருவ நட்சத்திரம். இதில் நடிகர் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரீத்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2017ம் ஆண்டு தொடங்கியது.

ஸ்டைலிஷ் விக்ரம்

ஸ்டைலிஷ் விக்ரம்

தொடங்கிய வேகத்தில் படக்குழுவினர் பல்வேறு புரமோஷனல் வீடியோக்களை வெளியிட்டனர். அவற்றில் விக்ரம் செம ஸ்டைலிஷாக இருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கவுள்ளது.

மார்ச்சில் டப்பிங்..

மார்ச்சில் டப்பிங்..

அதாவது துருவ நட்சத்திரம் படத்தின் பெண்டிங் பணிகள் வரும் மார்ச் மாதம் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி விக்ரம் தனது டப்பிங் பணிகளை மார்ச் மாதம் தொடங்குவார் என கூறப்படுகிறது.

மார்ச் மாதத்துடன் நிறைவு

மார்ச் மாதத்துடன் நிறைவு


விக்ரம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் பிஸியாக உள்ளார். இதன் படப்பிடிப்புகள் ஹைத்ராபாத்தில் நடைபெற்று வருகிறது. வரும் மார்ச் மாதத்துடன் படப்பிடிப்பு நிறைவடையும் என தெரிகிறது.

எடிட்டிங் வேலைகள்

எடிட்டிங் வேலைகள்

துருவ நட்சத்திரம் படத்தில் பாதிக்கு பாதி ஆக்ஷன் காட்சிகள்தான் என்பதால் அவருக்கு டப்பிங் பணிகள் எளிதாக இருக்கும் என தெரிகிறது. இதனிடையே கவுதம் மேனனிடமும் எடிட்டிங் வேலைகளை விரைந்து முடிக்குமாறும் விக்ரம் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்து வெளியாகும் படம்

அடுத்து வெளியாகும் படம்

இதன் காரணமாக அடுத்து வெளியாகும் விக்ரமின் படம் துருவ நட்சத்திரமாக கூட இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்திலும் அஜய் ஞானமுத்துவின் கோப்ரா படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X