சர்ச்சைக்குரிய அந்தக் காட்சி நீக்கப்படும்.. பொகரு பட விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட துருவா சர்ஜா!

சென்னை: பொகரு படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளுக்காக நடிகர் துருவா சர்ஜா மன்னிப்பு கோரியுள்ளார்.

நடிகர் அர்ஜூனின் அக்கா மகனும் மறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் தம்பியுமான துருவா சர்ஜா நடிப்பில் கன்னடத்தில் வெளியாகி இருக்கும் படம் பொகரு.

இந்தப் படம் தமிழில், செம திமிரு என்ற பெயரில் கடந்த வாரம் ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா லீடிங் ரோலில் நடித்துள்ளார்.

சர்ச்சையான பாடல்

சர்ச்சையான பாடல்

இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள கராபூ பாடல் லாக்டவுன் நேரத்தில் வீடியோ பாடலாக வெளியிடப்பட்டது. படத்தின் ஹீரோயினான ராஷ்மிகா மந்தனாவை படத்தின் ஹீரோ துருவ சர்ஜா மிரட்டி விரட்டி காதலிக்க சொல்லும் வகையில் இருந்தது.

அதிக வியூஸ்கள்

அதிக வியூஸ்கள்

இதற்கு மகளிர் அமைப்புகள் அப்போதே கண்டனம் தெரிவித்தன. இருந்த போதும் இந்தப் பாடல் வெளியான சில மணி நேரத்திலேயே நான்கரை மில்லியன் வியூஸ்களை குவித்து சாதனைப் படைத்தது. இதனால் 24 மணி நேரத்தில் அதிக வியூஸ்களை பெற்று சாதனை படைத்த கன்னட பாடல் என்ற பெருமையையும் பெற்றது.

சர்ச்சைக்குரிய காட்சிகள்

சர்ச்சைக்குரிய காட்சிகள்

இந்நிலையில் கடந்த வாரம் வெளியான படத்தில் பிராமணர்களை அவமதிக்கும் சில காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக சர்ச்சை எழுந்தது. பிராமணர்களை அவமதிக்கும் அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று கர்நாடக மாநில பிராமண அமைப்புகள் பெங்களூருவில் உள்ள கன்னட திரைப்பட வர்த்தக சபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தின.

அமைதி காத்த ஹீரோ

அமைதி காத்த ஹீரோ

இதையடுத்து பொகரு படத்தில் இருந்து பிராமணர்களை அவமதிக்கும் காட்சிகளை நீக்குவதாக இயக்குனர் நந்தகிஷோர் அறிவித்தார். மேலும் அவர் பகிரங்க மன்னிப்பும் கோரினார். ஆனால் படத்தின் ஹீரோவான துருவ சர்ஜா இந்த விவகாரம் தொடர்பாக எதுவும் பேசாமல் அமைதி காத்து வந்தார்.

அனுமன் பக்தர்கள்

அனுமன் பக்தர்கள்

இந்த நிலையில் துருவ சர்ஜாவும் பொகரு பட விவகாரம் தொடர்பாக வாய் திறந்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் எங்கள் முழு குடும்பமும் அனுமன் பக்தர்கள். அனுமன் ஆசிர்வாதத்தால் தான் நாங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

மன்னிப்பு கோருகிறேன்

மன்னிப்பு கோருகிறேன்

நாங்கள் இந்து கடவுள்களை மதிக்கிறோம். பொகரு படத்தின் மூலம் பிராமணர்களுக்கு ஏற்பட்ட வலிக்கு நான் மன்னிப்பு கோருகிறேன். இந்த படத்தின் பிராமணர்களை அவமதிக்கும் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X