பாலிவுட்டிற்கு செல்லும் துருவங்கள் பதினாறு...ஹீரோ யார் தெரியுமா?

சென்னை : டைரக்டர் கார்த்திக் நரேனின் முதல் படமான துருவங்கள் பதினாறு, பிரம்மாண்டமான முறையில் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பையும், பாராட்டையும் கார்த்திக் நரேனுக்கு பெற்றுத் தந்த படம் துருவங்கள் பதினாறு.

Recommended Video

V-CONNECT | ACTOR ASHWIN CHAT | SONG இல்லாம தான் DANCE பண்ணேன் | FILMIBEAT TAMIL

DHURUVANGAL PATHINAARU GOES TO BOLLYWOOD - THIS LEADING HERO ONBOARD

துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை துவக்கி இருக்கும் கார்த்திக் நரேன், தற்போது தனுஷை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார். இதற்கிடையில் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ள துருவங்கள் பதினாறு படத்தை சாஜித் நாதியத்வாலா தயாரிக்கிறார். இவர்தான் ரீமேக் உரிமத்தையும் வாங்கி உள்ளார்.

DHURUVANGAL PATHINAARU GOES TO BOLLYWOOD - THIS LEADING HERO ONBOARD

தமிழில் ரகுமான் நடித்த கேரக்டரில், இந்தியில் முன்னணி நடிகரான வருண் தவான் நடிக்க உள்ளார். ஹீரோயினாக பரினிதி சோப்ரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தியில் இந்த படத்திற்கு சன்கி என பெயரிடப்பட்டுள்ளது.

துருவங்கள் பதினாறு படத்தில் ஹீரோயின் கிடையாது. இருந்தாலும் இந்திக்கு ஏற்றாற் போல் சில மாற்றங்கள் செய்து, ஹீரோயின் கேரக்டர் சேர்க்கப்பட்டுள்ளது. வருண் தவான் முதல் முறையாக இப்படத்தில் மாற்று திறனாளி போலீசாக நடிக்க உள்ளார்.

இந்நிலையில் கார்த்திக் நரேனும், தனுஷ் மற்றும் மாளவிகா மோகனனை வைத்து டி 43 படத்தை இயக்க போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த படத்தை டி.ஜி.தியாகராஜன், சத்யஜோதி பிலிம்ஸ் பேனரில் தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் சமுத்திரக்கனி, ஆகாஷ் பிரேம்குமார், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். இந்த ஆண்டு இறுதியில் இப்படம் ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X