ஆக்சன் கிங் அர்ஜுன் கதையில் ஆக்சன் பிரின்ஸ் துருவா சர்ஜாவின் மாஸ் நடிப்பில் மார்டின் !!!

வாசவி எண்டர்பிரைசஸ் சார்பில் தயாரிப்பாளர் உதய் K மேத்தா தயாரிப்பில், ஆக்சன் கிங் அர்ஜுன் கதையில், இயக்குநர் AP அர்ஜுன் இயக்கத்தில், ஆக்சன் பிரின்ஸ் துருவா சர்ஜா நடிப்பில், பிரமாண்டமான பான் இந்தியத் திரைப்படமாக உருவாகியுள்ளது "மார்டின்" திரைப்படம்.

இந்திய அளவில் ரசிகர்களிடம் பெரும் ஆவலைத் தூண்டியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா, பிப்ரவரி 23 ஆம் தேதி, பெங்களூர் ஓரியன் மாலில் ரசிகர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவினில், தயாரிப்பாளர் உதய் K மேத்தா, ஆக்சன் கிங் அர்ஜுன், இயக்குநர் AP அர்ஜுன், நாயகன் துருவா சர்ஜா, நாயகி வைபவி சாண்டில்யா உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் அனைவரையும் மகிழ்விக்கும் வகையில், ஆக்சன் அதகளமாக உருவாக்கப்பட்டுள்ளது. வசனங்கள் இல்லாத இந்த டீசர், திரை கொள்ளாத ஆக்சன் காட்சிகளின் பிரமாண்டத்தையும், ஆக்சன் பிரின்ஸ் துருவா சர்ஜாவின் கதாப்பாத்திரத்தையும், படத்தை பற்றிய சிறு அறிமுகத்தை தருவதாகவும் அமைந்திருந்தது. இவ்விழாவினில் வெளியிடப்பட்ட டீசரை ரசிகர்கள் உற்சாக கரவொலியுடன் வரவேற்றனர்.

Dhurva Sarja in action king Arjun’s Story

இந்நிகழ்வினில் ஆக்சன் கிங் நடிகர் அர்ஜூன் கூறுகையில் ...

என்னைப் பொறுத்தவரை பான் இந்தியன் திரைப்படம் என்று ஒன்று கிடையாது. மக்களுக்கு ஒரு படம் பிடித்தால் அது முழு இந்தியாவையும் சென்றடையும். வெறும் பான் இந்தியா என்ற பெயரை மட்டும் போடுவதில் எந்த அர்த்தமும் இல்லை.மக்களுக்கு ஒரு திரைப்படம் பிடித்துவிட்டால், அது நெருப்பை போல மாறி, கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து இடங்களுக்கும் பரவிவிடும். அதை அடக்க கூட முடியாது. அது தான் பான் இந்தியப்படம் என்றார்.

அந்த வகையில் வெளியான நொடியிலிருந்து இணையம் முழுக்க தீயாக பரவி வரும் "மார்டின்" பட டீசரை, இந்தியா முழுக்கவே ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். வெளியான நாளிலிருந்து இன்றுவரை "மார்டின்" டீசர் டிரெண்டிங்கில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X