கர்ப்பத்தை அறிவித்த தியா மிர்சா...வைரலாகும் ஃபோட்டோக்கள்

மும்பை : ஏப்ரல் 1 ம் தேதி இன்ஸ்டாகிராமில் இணைந்த நடிகை தியா மிர்சா, தனது கர்ப்பத்தை அறிவித்ததுடன், கர்ப்பமாக இருக்கும் தனது ஃபோட்டோக்களையும் வெளியிட்டுள்ளார். இந்த ஃபோட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

DIA MIRZA ANNOUNCES PREGNANCY - BABY BUMP PICTURES TURNS VIRAL ON SOCIAL MEDIA

தியா மிர்சாவின் இந்த அறிவிப்பால் மகிழ்ச்சி அடைந்த அவரது ரசிகர்களும், பிரியங்கா சோப்ரா, பூஜா ஹெக்டே, கஜோல், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், டைரக்டர் ஜோயா அக்தர், விக்ரந்த் மாசே உள்ளிட்ட திரையுலக நண்பர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

DIA MIRZA ANNOUNCES PREGNANCY - BABY BUMP PICTURES TURNS VIRAL ON SOCIAL MEDIA

2019 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது முதல் கணவர் சாஹில் சங்காவிடம் இருந்து விவாகரத்து பெற்ற பிறகு, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வைபவ் ரேஹி என்ற தொழிலதிபரை இரண்டாவதாக மணந்து கொண்டார் தியா மிர்சா. புதிதாக திருமணமான இவர்களுக்கு பிறக்க போகும் முதல் குழந்தையை இந்த ஜோடி ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது.

கர்ப்பம் தொடர்பாக தியா மிர்சா தனது பதிவில், ஆசீர்வதிக்கப்பட்டேன். ஒன்று அன்னை பூமியில் பிறக்க. மற்றொன்று அனைத்து கதைகளின்...அனைத்தின் ஆரம்பமான உயிர்சக்தியுடன். தாலாட்டு. பாடல்கள். புதிய அரும்புகள். நம்பிக்கையுடன் பூக்கின்றன. என் வயிற்றில் உள்ள கனவுகள் அனைத்தும் தூய்மையான தொட்டிலில் தூங்க காத்திருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.'மின்னலே' படத்தின் இந்தி ரீமேக்கின் மூலம் நடிக்க துவங்கிய தியா மிர்சா, பல படங்களில் குறிப்பிட தகுந்த கேரக்டர்களில் நடித்துள்ளார். தெலுங்கு படங்கள் பலவற்றிலும் நடித்துள்ள தியா, புகழ்பெற்ற வெப் சீரிஸ்கள் பலவற்றிலும் நடித்துள்ளார்.

இவரது பதிவை இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் லைக் செய்துள்ளனர். 6000 க்கும் அதிகமானவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X