twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அந்த நாட்கள்ல நாப்கின் பயன்படுத்தாதீங்க... பிரசாரம் பண்ணும் பிரபல நடிகை!

    |

    Recommended Video

    பெண்களை நாப்கின் பயன்படுத்த வேண்டாமென்று பிரச்சாரம் செய்யும் பிரபல நடிகை !!- வீடியோ

    ஹம் தும் அவுர் கோஸ்ட், லவ் பிரேக்அப்ஸ் ஜிந்தகி, பாபி ஜோஸ் போன்ற பல இந்தி படங்களில் நடித்தவர் தியா மிர்சா. இப்போது சஞ்சய் தத் வாழ்க்கை வரலாறு படத்திலும் நடித்து வருகிறார். இவர்தான் நாப்கினை பயன்படுத்தாதீர்கள் என்று பிரசாரம் செய்து வருகிறார். அதற்கு இவர் சொல்லும் காரணம் என்ன தெரியுமா? பிளாஸ்டிக்.

    "நாப்கின் மற்றும் டயப்பர் போன்றவை அதில் உள்ள பிளாஸ்டிக் தன்மையால் சுற்றுச் சூழலை பெரிய அளவில் மாசுபடுத்துகின்றன. மாதவிடாய் நாட்களில் நான் நாப்கின் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டேன். சில நடிகைகள் நாப்கின் பற்றி புரமோஷன் செய்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை அதுபோன்ற விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் நிச்சயம் நடிக்க மாட்டேன். பயோகிரேடபிள் நாப்கினைத்தான் நான் பயன்படுத்துகிறேன். அது நூறு சதவீதம் இயற்கையானது. மண்ணில் மக்கி அழியும் தன்மை கொண்டது. நமது சுற்றுசூழலை காப்பாற்றி அடுத்த தலைமுறையினருக்கு மாசு இல்லாத ஒரு சூழலை அனைவரும் உருவாக்கி தரவேண்டும்,'' என்று சொல்லியுள்ளார்.

    Dia Mirza's protest against using Napkins

    தியா சொல்வதில் உண்மை இருக்கிறது. ஒரு ஆண்டில் ஒரு பெண் உபயோகிக்கும் நாப்கின்களின் எடை மட்டும் 125 கிலோ. ஒரு ஆண்டில் சுமார் 9000 டன் மாதவிடாய் நாப்கின் கழிவுகள் நாட்டில் சேர்கின்றனவாம்.

    அரசாங்கம் இப்போதுதான் நாப்கினையே கொடுக்கத் தொடங்கியுள்ளது. அது எப்போது பயோடீகிரேடபிள் நாப்கினுக்கு மாறுவது?

    Read more about: dia mirza actress நடிகை
    English summary
    Bollywood actress Dia Mirza has strongly protested against using non biograbable napkins .
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X