டைரி டீசரை தொடர்ந்து வெளியானது #அருள்நிதி15 ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்!

சென்னை: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக அருள்நிதி இருந்து வருகிறார்.

வித்தியாசமான கதைகளையே தொடர்ந்து தேர்வு செய்து நடித்து வருகிறார். இதனால் ரசிகர்களிடம் கவனம் பெறுகிறார்.

தற்போது அருள்நிதியின் அடுத்த புதிய திரைப்படம் குறித்த அப்டேட் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

நல்ல விமர்சனங்கள்

நல்ல விமர்சனங்கள்

அருள்நிதி நடிப்பில் இந்த ஆண்டு களத்தில் சந்திப்போம் திரைப்படம் வெளியானது. அருள்நிதி உடன் ஜீவா இந்த படத்தில் நடித்திருந்தார். திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது.

கதை தேர்வு

கதை தேர்வு

அருள்நிதியின் கதைத்தேர்வு நிச்சயமாக பாராட்டப்பட வேண்டிய ஒன்று. மௌன குரு, ஆறாது சினம், டிமான்டி காலனி, இரவுக்கு ஆயிரம் கண்கள், K - 13 என த்ரில்லர் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் கவனம் பெறுகிறார்.

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

அருள்நிதி நடிப்பில் அடுத்து டைரி வெளிவரவுள்ளது. இந்த படத்தை இன்னாசி பாண்டியன் இயக்கியுள்ளார். டைரி படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து கரு பழனியப்பன் இயக்கத்தில் புகழேந்தி என்னும் நான் படத்தில் அருள்நிதி நடிக்கிறார்.

அருள்நிதி பிறந்தநாள்

அருள்நிதி பிறந்தநாள்

இதையடுத்து அருள்நிதியின் 15வது படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. புதுமுக இயக்குனர் விஜய் குமார் ராஜேந்திரன் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை (ஜூலை 21) அருள்நிதியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளிவரவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X