அடுத்த வருடத்திற்கு தள்ளிப்போகிறதா '2.ஓ'..? பெரும் குழப்பத்தில் ஷங்கர்!

By Vignesh Selvaraj

Recommended Video

2.0 இந்த ஆண்டு முடிந்தாலும் வெளிவராது...!!

சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கியிருக்கும் '2.ஓ' படம் தள்ளிப்போனது ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியான செய்தியே.

இந்நிலையில் மீண்டும் ஒரு தகவல் பாலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. இயக்குநர் ஷங்கர் பெரும் குழப்பத்தில் இருக்கிறாராம்.

2.ஓ படம் இந்த வருடம் வெளியாகாமல் 2019-க்கு தள்ளிப்போகலாம் என்ற நிலை உருவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் நடித்துள்ள படம் '2.ஓ'. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் 2018 ஜனவரி இறுதியில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டது. பின்னர், ஏப்ரல் மாதம் வெளியாகும் என்றனர்.

முன்கூட்டியே ரிலீஸ் ஆகும் காலா

முன்கூட்டியே ரிலீஸ் ஆகும் காலா

ஆனால் இப்போது ஏப்ரலில் ரிலீஸ் இல்லை என்று கூறிவிட்டனர். அதனால் 2.ஓ படத்தினால் ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டிருந்த ரஜினியின் 'காலா' ஏப்ரல் 27-ம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் அதிகம்

பட்ஜெட் அதிகம்

'2.ஓ' படத்தில் வரும் VFX காட்சிகள் அமெரிக்கா போன்ற பல நாடுகளில் தயாரிக்கப்பட்டுவருகிறது. படத்தின் கிராஃபிக்ஸ் வேலைகளும் சற்று அதிகம் என்பதோடு இதற்கு செலவும் அதிகம் ஆகி வருகிறதாம். இதனால் படத்தின் பட்ஜெட் எகிறிக்கொண்டு போகிறதாம்.

VFX பணிகள் நிறுத்தம்

VFX பணிகள் நிறுத்தம்

ஆனால் தற்போது வரும் தகவல்களின்படி, '2.ஓ' படத்தின் VFX பணிகளுக்காக அதிகப்படியான செலவு செய்து வரும் லைகா நிறுவனத்திற்கு வரவேண்டிய ஃபைனான்ஸ் தற்போது தாமதமாகிறதாம். அதனால்,VFX பணிகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

அடுத்த ஆண்டுதானா?

அடுத்த ஆண்டுதானா?

அதனால் ரஜினியின் '2.ஓ' படம் 2018-ல் வெளிவர வாய்ப்பில்லை, 2019-ல் தான் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினருக்கு ரிலீஸ் குறித்த கவலை வந்துவிட்டதோடு விரைவாக படத்தின் வேலைகளை முடித்துவிடவேண்டும் என முயற்சித்து வருகிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X