Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
உதயநிதி ஸ்டாலின் வாங்கிய அடுத்த பிரம்மாண்ட படம் அதுதானா? உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
சென்னை: தமிழ்நாட்டில் வெளியாகும் பெரிய படங்கள் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் பேனரிலேயே ரிலீசாகி வருகின்றன.
இதுதொடர்பாக ஏகப்பட்ட விமர்சனங்கள் குவிந்தாலும், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நேர்மையாக எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் படங்களை வெளியிட்டு வருவதால் தான் பெரிய படங்களை அந்த பேனரில் வெளியிட கொடுக்கிறோம் என தயாரிப்பாளர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று மாலை அடுத்த ஒரு பெரிய படத்தின் ரிலீஸ் பற்றிய அறிவிப்பு வெளியாக போகிறது என தற்போது ரெட் ஜெயண்ட் மூவிஸ் போட்டுள்ள ட்வீட் ரசிகர்களை பல படங்களை யூகிக்க வைத்திருக்கிறது.
பூஜையுடன் தொடங்கியது சந்திரமுகி-2..அட வடிவேலு கரெக்டா ஆஜராகிட்டாரே..ராதிகாக்கு என்ன ரோல்?அப்ப நாயகி?

மீண்டும் புத்துணர்ச்சியுடன்
மீண்டும் புத்துணர்ச்சியுடன் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெரிய படங்களை வாங்கி தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் செய்து வருகிறது. ஒரு பக்கம் மாமன்னன் படத்தில் பிசியாக நடித்து வரும் உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ரிலீஸ் செய்யும் படங்களின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு புரமோஷன் செய்து வருகிறார். அனைத்து கணக்குகளும் சரியாக உள்ளதாகவும், லாபம் கிடைப்பதாகவும் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து பாராட்டு பத்திரங்களை கொடுத்து வரும் நிலையில், புதிய படங்கள் ரெட் ஜெயண்ட் பேனரில் வெளியாகி வருகின்றன.
Recommended Video

FIR முதல் விக்ரம் வரை
இந்த ஆண்டு ரெட் ஜெயண்ட் மூவிஸ் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான FIR, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், பிரபாஸின் ராதே ஷ்யாம், விஜய்சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல், சிவகார்த்திகேயனின் டான், கமல்ஹாசனின் விக்ரம் மற்றும் மாதவனின் ராக்கெட்ரி உள்ளிட்ட படங்களை இதுவரை தமிழ் நாட்டில் ரிலீஸ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கோப்ரா முதல் சர்தார் வரை
இதுமட்டுமின்றி விரைவில் வெளியாக உள்ள சந்தானத்தின் குலுகுலு, சியான் விக்ரமின் கோப்ரா, தனுஷின் திருச்சிற்றம்பலம், சிம்புவின் வெந்து தணிந்தது காடு, கார்த்தியின் தீபாவளி ரிலீசான சர்தார் படம் வரை ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான் வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்னொரு பிரம்மாண்ட படத்தின் அறிவிப்பு இன்று மாலை வெளியாக போகிறது.

பொன்னியின் செல்வனா?
லைகா தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் டான் படத்தை ரிலீஸ் செய்த ரெட் ஜெயண்ட் மூவிஸ் அடுத்ததாக வரும் செப்டம்பர் 30ம் தேதி மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்று விட்டனரா? என்கிற கேள்வியும் இந்த அறிவிப்பு மூலம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அமீர் கான் படம்
அதே சமயம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாக உள்ள அமீர் கானின் லால் சிங் சத்தா படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை உதயநிதி கைப்பற்றி உள்ளாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. அந்த படத்தில் குறிப்பாக பயன்படுத்தப்படும் இறகு இந்த அறிவிப்பு போஸ்டரில் இடம்பெற்றுள்ள நிலையில், அந்த படத்தின் வெளியீட்டு உரிமை பற்றிய அறிவிப்பாகத்தான் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை உண்மை தெரிந்து விடும்.

அமீர் கான் மாஸ்டர் பிளான்
பாலிவுட் படங்கள் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் சொதப்பி வரும் நிலையில், அமீர் கான் தனது லால் சிங் சத்தா படத்தின் மூலம் மீண்டும் பாலிவுட் மானத்தைக் காப்பாற்ற முயற்சிகளை எடுத்து வருகிறார். ஏகப்பட்ட ஆஸ்கர் விருதுகளை அள்ளிய Forrest Gump படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் படமான இந்த படத்தை தென்னிந்தியாவிலும் மிகப்பெரிய அளவில் ரீச் செய்ய முடிவு செய்துள்ள அமீர் கான் சமீபத்தில், சிரஞ்சீவ், ராஜமெளலி உள்ளிட்ட பிரபலங்களுக்கு போட்டுக் காட்டி இருந்தார். தெலுங்கில் இந்த படத்தை சிரஞ்சீவி வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.