பரிணீத்தி சோப்ராவை காதலிக்கிறாரா ஆம் ஆத்மி எம்பி? அவரே சொன்ன பதிலை பாருங்க!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினராக பரிணீத்தி சோப்ராவை ஆம் ஆத்மி எம்பி ராகவ் காதலித்து வருவதாக செய்திகள் பரவி வரும் நிலையில், அது தொடர்பான கேள்விக்கு ராகவ் பதிலளித்துள்ளது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
நடிகை பிரியங்கா சோப்ரா தமிழன் படத்தில் நடிகையாக அறிமுகமாகி பாலிவுட்டில் பிரபலமான நிலையில், ஹாலிவுட் படங்கள் வரை நடித்து வருகிறார்.
நிக் ஜோனஸ் எனும் இளம் அமெரிக்க பாடகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், அவரது சொந்தக்கார பெண்ணான பரிணீத்தி சோப்ரா 34 வயதாகியும் இன்னமும் முரட்டு சிங்கிளாக உள்ளார்.

பிரியங்கா சோப்ரா தங்கச்சி
நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு தங்கச்சி முறை தான் நடிகை பரிணீத்தி சோப்ரா. பாலிவுட்டின் முன்னணி நடிகையாக பிரியங்கா சோப்ரா வலம் வரும் நிலையில், பரிணீத்தி சோப்ராவும் சிறப்பான கதைகளை தேர்வு செய்து நடித்து தனக்கான ஒரு இடத்தை பாலிவுட்டில் உருவாக்கி வைத்து இருக்கிறார்.

பரிணீத்தி சோப்ரா
கடந்த 2011ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான லேடீஸ் vs ரிக்கி பால் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பரிணீத்தி சோப்ரா. கில் தில், டிஷூம், கோல்மால் அகைன், நமஸ்தே இங்கிலாந்து, கேசரி, தி கேர்ள் ஆன் தி டிரைன், சாய்னா, கோட் நேம் திரங்கா, உன்சாய் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் பரிணீத்தி சோப்ரா.

திருமணம் ஆகல
34 வயதாகும் பாலிவுட் நடிகை இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். சாம்கில்லா, கேப்சூல் கில் உள்ளிட்ட படங்களில் தற்போது நடித்து வருகிறார் பரிணீத்தி சோப்ரா. நடிகை பிரியங்கா சோப்ரா திருமணம்ச் எய்து கொண்டு வாடகைத்தாய் மூலம் ஒரு பெண் குழந்தைக்கு தாயாகி உள்ள நிலையில், பரிணீத்தி சோப்ரா விரைவில் திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எம்பியுடன் டேட்டிங்
இந்நிலையில், சமீப காலமாக பரிணீத்தி சோப்ரா ஆம் ஆத்மி கட்சி எம்பியான ராகவ் சத்தா உடன் மும்பையில் பல இடங்களில் சுற்றித் திரிந்து வரும் புகைப்படங்கள் வெளியாகி இருவரும் டேட்டிங் செய்கின்றனரா என்கிற கேள்வியை எழுப்பி உள்ளது. லஞ்ச் மற்றும் டின்னருக்கு ராகவ் சத்தா உடன் பரிணீத்தி சோப்ரா டேட்டிங் சென்று இருக்கிறார்.

ராகவ் சத்தாவிடம் கேள்வி
மார்ச் 23ம் தேதி ஆம் ஆத்மி எம்பி ராகவ் சத்தாவை மடக்கி பத்திரிகையாளர்கள் நடிகை பரிணீத்தி சோப்ரா பற்றிய கேள்விகளை அடுக்கி உள்ளனர். அதற்கு ராகவ சத்தா அளித்துள்ள பதில் தான் தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. மேலும், டேட்டிங் வதந்திக்கும் அவர் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

பரிணீத்தி பற்றி கேட்காதீங்க
பத்திரிகையாளர்களின் கேள்வியை எதிர்கொண்ட ராகவ் சத்தா சிரித்துக் கொண்டே, அரசியல் பற்றி மட்டும் கேளுங்க பாஸ்.. பரிணீத்தி சோப்ரா பற்றியெல்லாம் கேட்காதீங்க என்றும் நாங்க இருவரும் காதலிக்கவில்லை என்றும் கூறி எஸ்கேப் ஆகி உள்ளார். ஆனால், இருவரும் அடிக்கடி ஏன் சந்தித்துக் கொண்டனர் என்கிற கேள்விக்கு ராகவ் சத்தா பதிலளிக்காத நிலையில், இருவரும் ஏதோ ஒரு விஷயத்தை மறைப்பதாகவே பாலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.


Click it and Unblock the Notifications











