Bigg Boss Tamil 7: அப்பாஸ் இந்த சீசன் பிக் பாஸ் 7ல் இருக்காரா? இல்லையா?.. லீக்கான ரகசியம்!
சென்னை: பிக் பாஸ் சீசன் 7ல் கிரண் வராங்க, சோனியா அகர்வால் வராங்க, நடிகர் அப்பாஸ் வராரு மற்றும் நல்ல நல்ல போட்டியாளர்கள் எல்லாம் வராங்க என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் ஒவ்வொரு போட்டியாளரும் நானா? அந்த வீட்டுக்கா ஆளவிடுங்கடா சாமி.. என தெறித்து ஓடி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள நிலையில், நாளை அதன் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறுகின்றனர்.

இந்நிலையில், இந்த சீசனில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளரான அப்பாஸ் வருகிறாரா? இல்லையா? என்பது குறித்து கசிந்திருக்கும் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க..
எதிர்பார்க்கப்படும் லிஸ்ட்: பிக் பாஸ் சீசன் 7ல் இரண்டு வீடுகள் என கமல் ஆரம்பத்திலேயே பக்கா பில்டப் கொடுத்த நிலையில், போட்டியாளர்களும் இந்த முறை தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இணையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மீண்டும் இந்த முறையும் விஜய் டிவி போட்டியாளர்கள் தான் அதிகமாக இடம்பெறப் போவதாக கூறுகின்றனர். தர்ஷா குப்தா, விசித்ரா, வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா, ரவீனா, விஷ்ணு, சத்யா, குமரன், பப்லு பிரித்விராஜ் என எதுவுமே பெரிதாக தேறாத போட்டியாளர்கள் லிஸ்டே இந்த முறை இடம்பெற்றுள்ளது என ரசிகர்கள் ஃபீல் செய்து வருகின்றனர்.
ஆனால், கடைசி நேரத்தில் ஈஸ்டர் எக் போல விஜய் டிவி யாரயாவது வீட்டிற்குள் அனுப்பி நிகழ்ச்சியின் டிஆர்பியை எகிற விடும் என்கிற நம்பிக்கையும் ரசிகர்களுக்கு உள்ள நிலையில், துவக்க விழா நிகழ்ச்சியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
அப்பாஸ் இருக்காரா?: சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து சென்னை வந்து அதிரடியாக பல பேட்டிகளை கொடுத்து ரசிகர்களை மீண்டும் கவர்ந்த நடிகர் அப்பாஸ் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், கடைசியாக கசிந்த தகவலின் படி அப்பாஸும் பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக பங்கேற்க போவதில்லை என்றே உறுதியாக கூறுகின்றனர். எதுவாக இருந்தாலும், நாளை ஷூட்டிங் முடிந்ததுமே உறுதியான போட்டியாளர்கள் பட்டியல் கசிந்து விடும் என்பது தெரிந்த விஷயம் தான்.. காத்திருப்போம்!


Click it and Unblock the Notifications











