திரெளபதி படத்திற்கு அஜித் வாழ்த்து தெரிவித்தாரா? வைரலாகும் போட்டோ.. இயக்குனர் பரபரப்பு விளக்கம்!
சென்னை: திரௌபதி படத்திற்கு நடிகர் அஜித் வாழ்த்து தெரிவித்ததாக தகவல் பரவி வரும் நிலையில் அதுகுறித்து இயக்குநர் மோகன் விளக்கம் அளித்துள்ளார்.
மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் திரௌபதி. ரிச்சர்டு, ஷீலா ராஜ்குமார் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் ட்ரெயிலர் கடந்த வாரம் வெளியானது.
இதில் இரண்டு சமூகங்கள் குறித்தும், நாடகக்காதல், மற்றும் ஆணவக் கொலை குறித்தும் பேசுவதாக உள்ளது. இதனால் படத்திற்கு எதிர்ப்பும் ஆதரவும் ஒன்றாக கிளம்பியிருக்கிறது.

போலீஸில் புகார்
படத்தில் இடம்பெற்ற வசனங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனிடையே, ஆணவப்படுகொலைகளை நியாயப்படுத்தும் வகையில் இந்த திரைப்படம் அமைந்துள்ளதாக கூறி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் தரப்பில் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் வாழ்த்து
ஒரு தரப்பினர் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என்றும் மற்றொரு தரப்பினர் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் திரெளபதி படத்திற்கு அஜித் வாழ்த்து தெரிவித்ததாக தகவல் பரவி வருகிறது.

சந்தேகம்
அதற்கு ஏற்றார் போல் இப்படத்தின் இயக்குனர் மோகன், அஜித்துடன் இருக்கும் போட்டோக்களும் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் உண்மையிலேயே அஜித் வாழ்த்து கூறினாரா அல்லது வதந்தியா என்ற சந்தேகம் எழுந்தது.
வதந்திகளை நம்பாதீர்
இந்நிலையில் இதுகுறித்து படத்தின் இயக்குநர் மோகன் தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், வதந்திகளை நம்பாதீர். திரெளபதி குறித்து அஜித் எனக்கு எந்த வாழ்த்தையும் தெரிவிக்கவில்லை. உலவும் புகைப்படம் ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு ரசிகராக அவருடன் எடுத்தது மட்டுமே' என்று கூறியுள்ளார்.

வதந்தி என்பது உறுதி
இதன்மூலம் அஜித் வாழ்த்து கூறினார் என்ற பரவும் தகவல் வெறும் வதந்தி என்பது உறுதியாகியுள்ளது. திரௌபதி படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.


Click it and Unblock the Notifications











