நடிகர் ஜெய்க்கு கல்யாணம் ஆகிடுச்சா?.. கழுத்தில் தாலியுடன் இருக்கும் அந்த பெண் யார்?
சென்னை: 40 வயதாகும் நடிகர் ஜெய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது புதிய வாழ்க்கை தொடக்கம் என ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்தப் பெண் கழுத்தில் புது தாலியுடன் போட்டோ இருப்பதால் நடிகர் ஜெய்க்கு திருமணம் ஆகிவிட்டதா என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
1984 ஆம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி சென்னையில் பிறந்த ஜெய் இந்த மாதம் தனது 40 வது பிறந்தநாளை கொண்டாடி இருந்தார். கடைசியாக ஜெய் நடிப்பில் அன்னபூரணி திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

40 வயதானாலும் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் நடிகர் ஜெய் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இது புதிய படத்திற்காகவா? அல்லது திருமணம் செய்து கொண்டாரா என்கிற கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
நடிகர் ஜெய்: 2002 ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் பகவதி படத்தில் தளபதியின் தம்பியாக நடித்திருந்தார் ஜெய். அந்தப் படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் 2007-ம் ஆண்டு வெளியான சென்னை 600028 படத்தில் பல்வேறு நடிகர்களுடன் ஜெய்யும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தை தொடர்ந்து வெளியான சுப்ரமணியபுரம் திரைப்படம் ஜெய்க்கு மிகப்பெரிய அடையாளத்தை தமிழ் சினிமாவில் கொடுத்தது. சரோஜா, கோவா, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி உள்ளிட்ட படங்கள் விஜய்க்கு மிகப்பெரிய வெற்றி படங்களாக மாறின.
அஞ்சலியுடன் காதல் கிசுகிசு: எங்கேயும் எப்போதும் படத்தில் அஞ்சலியுடன் இணைந்து ஜெய் நடித்த நிலையில், இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்ததாக கிசுகிசுக்கள் கிளம்பின. அதன் பின்னர் இருவரும் பிரேக்கப் செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
நயன்தாராவுக்கு ஜோடி: அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடித்த ஜெய் ஷங்கரின் உதவி இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான அன்னபூரணி படத்திலும் நயன்தாராவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ராஜா ராணி திரைப்படம் போல அந்த படம் வெற்றி படமாக அமையும் என எதிர்பார்த்த நிலையில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலிருந்து நீக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படு்த்தியது.
ஜெய்க்கு திருமணமாகிவிட்டதா?: “New life started with God blessings" என்கிற கேப்ஷன் உட இளம் நடிகையுடன் காரில் அமர்ந்தபடி எடுத்துக்கொண்டு செல்பி புகைப்படத்தை தற்போது நடிகர் ஜெய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதைப் பார்த்து ரசிகர்கள் பலரும் நடிகர் ஜெய்க்கு திருமணம் ஆகிவிட்டதா என்கிற கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
யார் அந்த பெண்?: வரலாறு முக்கியம், என் 4, நதிகளில் சுந்தரி யமுனா உள்ளிட்ட படங்களில் நடித்த இளம் நடிகை பிரக்யா நாக்ரா தான் ஜெய்யுடன் கழுத்தில் புதிய தாலியுடன் போஸ் கொடுத்துள்ளார். பேபி அண்ட் பேபி எனும் புதிய படத்தில் இருவரும் ஜோடியாக நடித்து வருகின்றனர். அந்த சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தான் தற்போது நடிகர் ஜெய் வெளியிட்டுள்ளார் என்றும் அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











