ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் மனைவியை பிரிந்தாரா? இணையத்தில் பரவும் செய்தி!
சென்னை: இந்த ஆண்டு போதாத காலம் என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்தடுத்து திரை பிரபலங்களின் விவாகரத்து அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர், மணிகண்டன் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருவதாக இணையத்தில் ஒரு செய்தி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவரின் சகோதரரான மணிகண்டன் சினிமா மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார். இவர், அவள் என்ற சீரியலில் நடித்து சின்னத்திரையில் தனது அறிமுகத்தை கொடுத்தார். அதைத்தொடர்ந்து அழகு, சிவா மனசுல சக்தி, தாய் வீடு நாச்சியார், என பல சீரியல்களில் நடித்து பிரபலமானார். சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தபோது தன்னுடன் நடித்த சோபியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஆர்யன் என்கின்ற மகன் இருக்கிறார். கணவன் மனைவி இருவருமே இணைந்து பல சீரியல்களில் நடித்து வந்த நிலையில், குழந்தை பிறந்த பிறகு சோபியா, சினிமாவில் இருந்து விலகி குடும்பத்தை கவனித்துக் கொண்டார். இப்போது, மகன் வளர்ந்த விட்டதால், மீண்டும் சினிமா மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார் நடிகை சோபியா.

ஹீரோவாக: சீரியல்களில் நடித்து வந்த மணிகண்டன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் 'மை டியர் டயானா ' இணையத் தொடரில் நடித்து வருகிறார்.பி. கே. விஜய் மற்றும் கிரிதர் ராமகணேஷ் இயக்கத்தில் தயாரிக்கும் இந்த வெப்தொடரில், மணிகண்ட ராஜேஷ், நடிகை மகாலட்சுமி, ஜனா குமார், மகேஷ் சுப்பிரமணியம், அக்சயா பிரேம்நாத், துரோஷினி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பிரிந்துவிட்டார்களா: இந்நிலையில் நடிகர் மணிகண்டன் தனது மனைவி சோபியா பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இணையத்தில் இந்த செய்தி காட்டுத்தீ போல பரவினாலும், இதுகுறித்து, தற்போது வரை மணிகண்டன் மற்றும் சோபியா தம்பதியினர் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாததால், இது வதந்தியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











