ப்ளூ சட்டை மாறன் தாக்கப்பட்டாரா? பிவிஆர் தியேட்டரில் என்ன தான் ஆச்சு? அவர் என்ன சொல்றாரு தெரியுமா?

சென்னை: அஜித், சூர்யா ரசிகர்களுடன் தொடர்ந்து ட்விட்டர் சண்டை போட்டு வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.

வலிமை, எதற்கும் துணிந்தவன் படங்களை அவர் மோசமாக விமர்சித்ததில் இருந்தே பெரும் பிரச்சனை ஓடிக் கொண்டிருக்கிறது.

அஜித் ரசிகர்கள் வெளியே உன்னை பார்த்தால் அடி வெளுத்து விடுவோம் என ட்விட்டரில் சொல்லி வந்த நிலையில், தற்போது ப்ளூ சட்டை மாறன் மீது தாக்குதல் நடந்துள்ளதாக தகவல்கள் காட்டுத் தீ போல பரவி வருகின்றன.

கடுமையான விமர்சனம்

கடுமையான விமர்சனம்

கமர்ஷியல் படங்களை கண்டாலே கடுமையான விமர்சனத்தை போட்டுத் தாக்கி வருகிறார் ப்ளூ சட்டை மாறன். சமீபத்தில் இயக்குநர் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை திரைப்படத்தை வெளுத்து வாங்கி இருந்தார். மேலும், அஜித்தின் நடனத்தை பரோட்டாவுக்கு மாவு பிசைவது போல இருப்பதாகவும், நடிகர் அஜித்தின் தோற்றம் பஜன் லால் சேட் போல இருப்பதாகவும் விமர்சித்து இருந்தது அஜித் ரசிகர்களை மட்டுமின்றி ஏகப்பட்ட சினிமா பிரபலங்களையும் கோபத்தில் ஆழ்த்தியது.

சூர்யாவையும் விடல

சூர்யாவையும் விடல

அஜித்தின் வலிமை படத்தை தொடர்ந்து மார்ச் 10ம் தேதி வெளியான சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், பிரபாஸின் ராதே ஷ்யாம், தனுஷின் மாறன் என தொடர்ந்து வெளியான அத்தனை படங்களையும் கழுவி ஊற்றினார் ப்ளூ சட்டை மாறன். மேலும், சிவகுமார் முருகனாக அழகாக இருந்தார், சூர்யாவுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்றும் விமர்சித்து இருந்தது சூர்யா ரசிகர்களை கடுப்பாக்கியது.

எச்சரித்த ஆரி

எச்சரித்த ஆரி

கள்ளன் திரைப்படத்தின் விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகரும் பிக் பாஸ் பிரபலமுமான ஆரி அர்ஜுனன் சினிமாவில் இருந்து கொண்டே சினிமாவை இப்படி கடுமையாக விமர்சிப்பது அழகு இல்லை என்றும் நான் சுற்றி வளைத்து பேசல, ப்ளூ சட்டை மாறன் அண்ணாவை தான் சொல்றேன் என எச்சரித்து இருந்தார்.

ஆர்.கே. சுரேஷ்

ஆர்.கே. சுரேஷ்

நடிகர் அஜித்தின் தீவிரமான ரசிகர்களான ஜான் கொக்கன் மற்றும் ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் ப்ளூ சட்டை மாறன் வலிமை படத்தை விமர்சித்ததை கண்டித்து சில பல வார்த்தைகளை விட்டு திட்டினர். அவர்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில், அவர்கள் சொன்ன அதே 'வெண்ணெய்' உள்ளிட்ட கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி ட்ரோல் செய்ய தொடங்கினார் ப்ளூ சட்டை மாறன்.

ஆன்டி இண்டியன் டிசாஸ்டர்

ஆன்டி இண்டியன் டிசாஸ்டர்

சினிமா டிராக்கரான மனோபாலா ஆன்டி இண்டியன் படத்தை டிசாஸ்டர் என சொன்னதால் தான் ட்ரிக்கர் ஆகி ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து இப்படி அஜித்துக்கு எதிராக களமிறங்கி உள்ளார் என அஜித் ரசிகர்கள் ஏகப்பட்ட ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி மீம்களை போட்டு திட்டித் தாக்கி வந்தனர். ஆனால், எதற்கும் துணிந்தவனாக ப்ளூ சட்டை மாறன் அவர்களுடன் ட்விட்டர் சண்டை போட்டு வந்தார்.

ப்ளூ சட்டை மாறன் தாக்கப்பட்டாரா

ப்ளூ சட்டை மாறன் தாக்கப்பட்டாரா

ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து நடிகர் அஜித் படங்கள் எல்லாம் டிசாஸ்டர் என ஒரு பெரிய பட்டியலே போட்டு கலாய்க்க தொடங்கிய நிலையில், அஜித் ரசிகர்கள் உன்னை வெளியே எங்கே பார்த்தாலும் அடிப்போம் என கமெண்ட் பக்கத்தில் எச்சரித்து இருந்தனர். இந்நிலையில், தற்போது ப்ளூ சட்டை மாறன் தாக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன.

பிவிஆரில் என்ன ஆச்சு?

பிவிஆரில் என்ன ஆச்சு?

பிவிஆர் தியேட்டரில் ப்ளூ சட்டை மாறன் உடன் சில அஜித் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், சிலர் அவரை தாக்கியே விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. பிவிஆரில் என்ன ஆச்சு? என ப்ளூ சட்டை மாறன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு அந்த புகைப்படத்தை வைரலாக்கியதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ப்ளூ சட்டை மாறன் விளக்கம்

ப்ளூ சட்டை மாறன் விளக்கம்

இந்நிலையில், "PVR ல என்னடா ஆகும்? தியேட்டர்னா நாலு பேர் பாக்க வருவாங்க. முடிஞ்சதும் வெளிய போவாங்க. அதை மறைஞ்சி நின்னு ஏன்டா போட்டோ எடுத்த? நேர்ல வந்து எடுத்து தொலைய வேண்டியதுதான? இதை ஷேர் பண்ணுற அளவுக்கு நான் செலப்ரிட்டி இல்ல. எப்படியோ...வைரல் பப்ளிசிட்டி தந்த அந்த தம்பிக்கு ரொம்ப நன்றி." என ட்வீட் போட்டு அந்த போட்டோவையும் ப்ளூ சட்டை மாறன் ஷேர் செய்துள்ளார்.

Recommended Video

Aari slams blue sati maran | மல்லாக்க படுத்து எச்சில் துப்பினா அது நம்ம மேல தான் விழும்
எல்லை மீறும் ரசிகர்கள்

எல்லை மீறும் ரசிகர்கள்

விமர்சகர் மற்றும் இயக்குநரான ப்ளூ சட்டை மாறன் வார வாரம் தியேட்டருக்கு படம் பார்க்க வருவார். இப்படி ட்விட்டர் சண்டையை நிஜ சண்டையாக மாற்றி ரசிகர்கள் அவரை தாக்க முற்படுவது சரியில்லை என்றும், இதனால் ரசிகர்கள் தான் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என நெட்டிசன்கள் எச்சரித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X